பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கவனித்து வளர்க்கும் பயிற்சிக்கே மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) எனப் பெரியோர் கூறுகின்றார்கள்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரித்துக்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை;
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே."

என்கிறார் திருமூலர்.

முற்காலத்தில் நமது பெரியோர்கள் மூச்சுப் பயிற்சியைக் காலை, நண்பகல், மாலை மூன்று வேளையும் தவறாது செய்து வந்தார்கள். ஆதலால் நோயின்றி உடல் உரத்துடன் நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்தார்கள்.

பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி செய்யும் முறையை எனது தந்தையிடத்தில் தெரிந்துகொண்டதையும், நூல்களில் கண்டதையும் விரிவஞ்சி இதில் எழுதாமல் விடுகின்றோம். உயிர் நலத்திலும் உடல் நலத்திலும் அக்கறையுள்ளவர்கள் அதைத் தக்கவர்கள் வழி அறிந்து செய்து நலமடைவார்களாக தமிழ் மருத்துவக்கலை மேற்கூறிய மணி மந்திரங்களோடு இம் மூச்சுப் பயிற்சி முறைகளையே இயற்கைப் பெருமருந்தாகக் கொண்டு போதிக்கின்றது. ஏனைய மருந்துகள் நான்காம் பகுதியே.

தமிழ் மருத்துவ நூல்களில், உடம்பில் எழுபத்திராயிரம் நாடி நரம்புகள் உள்ளனவென்றும், அவற்றில் பத்து நாடி முதன்மை என்றும், பத்தில் மூன்று நாடி முதன்மை எனவும், நாழிகை ஒன்றுக்கு முந்நூற்றறுபது மூச்செனவும், நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு மூச்செனவும், 5 நாழிகைக்கு