பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

காட்டியைப் பாராமலும், இருக்கும் இடத்திலிருந்து மூக்கு முனையில் நடைபெறும் மூச்சுப் பார்த்தே இரவு பகல் மணி சொல்லுவார்கள்; எனது பாட்டனாரிடத்திலும் தந்தையிடத்திலும் இவ்வரிய செயலை நேரில் பார்த்தேன்; இச்சரப் பயிற்சியால் தன்னிடம் வரும் நோயாளிக்கு நோய் தீரும் தீராதெனவும், பிழைப்பான் பிழைக்கமாட்டானெனவும் கூறினார்கள்; நோயாளியை வந்து பார்க்கும்படி மருத்துவனை அழைக்கவரும் ஆண் பெண்களையும், அவர்கள் வந்து நிற்கும் திசைகளையும், அவர்கள் வாயிலிருந்து வரும் முதற் சொல்லையும், அச்சமயம் மருத்துவனுக்கு மூக்கில் நடக்கும் சரத்தையும் கண்டு நோயாளியின் நிலையைத் தெரிந்து கொள்ளுவார்கள்; முற்காலத்தில் மருத்துவர்களும் பெரு மக்களில் பலரும் வீட்டைவிட்டு வெளியே புறப்படும்போது மூக்கில் விரல் வைத்துச் சரத்தைப் பாராமல் புறப்படமாட்டார்கள்; நீரில் தலை முழுகுமுன்னும் உணவு உட்கொள்ளுமுன்னும் வலப்பக்கம் நாசியில் சுவாசம் (சூரியனில் நடைபெறுகிறதா என்பதைக் கவனிப்பார்கள்; சோதிடமும் பார்ப்பார்கள்; வானத்திலுள்ள நவக்கிரகங்களின் உச்சநிலையைப் பற்றிக் கவனித்துச் சூரியனைக் காலை மாலை கண்ணால் பார்ப்பது போல் சந்திரனையும் முக்கியமான நட்சத்திரங்களையும் இரவில் பார்ப்பார்கள். நோயாளியின் ஜாதகத்தையும் பார்ப்பார்கள்; இவைகளை எல்லாம் பார்த்து மருத்துவம் செய்வதுதான் இயற்கை மருத்துவம். அதில்தான் பயன் மிகுதி. தமிழ் மருத்துவம் அப்படிப்பட்டது கிரகமெனும் ஞாயிறு மறைவு மதிமறைவு நேரத்தில் உண்ணாமல் ஓர் அலுவலும் பண்ணாமல் தனித்திருந்து பேசாமல் தியானம் செய்யும்படி தமிழ் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அந்நேரத்து ஒளியில் பலவகைக் கெடுதல்