பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 "தோலா நாவின் மேலோர் பேரவை உடின்மரீஇ யிருக்கை ஒருநாள் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறை மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே' என்னும் அடிகளால் இதனை அறியப் பெறலாம். கல்விக் கழகத்தில் கூடிப் பெறக்கூடிய இன்பம், இச்செய்யுளில் சிறப்பிக்கப்பட்டுள்ளதன்ருே ? - புலவர் தொழில் புலவர்கள் ஒரு கழகத்தில் ஒன்று கூடும்போது நாம் பல இனிய கருத்துக்களே எடுத்துப் பேசியும் கேட்டும் இன்புறலாம் என்று மகிழ்ச்சியுடன் கூடுவார்கள். பிரியும் போதோ, இனி என்று கூடி இன்புறுவது என்னும் ஏக்கத் துடன் வருக்திப் பிரிவார்களாம். பண்டு. மதுரைத் தமிழ்ச் சங்கத்தை விட்டுப் பிரிங்த நக்கீரர் என்னும் புலவர் ஒைன்றுயிர்த் துணையாம் சங்கத்து உறவை எஞ்ஞான்றும் காண்பேன்' என்று புலம்பிப் பிரிந்தாராம். இது புலவர் களின் இயற்கைத் தொழிலாகும். இக்கருத்தையே, உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்னும் குறளும் குறித்துச் செல்கின்றது. செவியின்பம் தாமே கற்றும் பிறர்க்கு எடுத்துக் கூறியும் இன்பம் எய்த இயலாதவர்கள் கல்விக் கழகங்கட்குச் சென்று பிறர் கூறுவதைக் கேட்டாயினும் செவியின்பம் பெறலாம். இச் செவியின்பமும் பெருவிட்டால் செவிகளைப் பெற்றும் பயனில்லை. வயிற்று உணவைவிட இச்செவி உணவே 41 சிறப்புடையதாகும். செவிக்கு உணவு கிடைக்காதபோதே சிறிது வயிற்றிற்கும் உணவு தரல் வேண்டும். அங்ங்னம் செவிச் சுவையினச் சிறிதும் விரும்பாது வாய்ச்சுவை ஒன்றையே விரும்பும் மாக்கள் இருப்பதும் ஒன்ற்ே : இறப் பதும் ஒன்றே. ஆதலால் காகால் கேட்டாயினும் கல்வி யின்பத்தை நுகர வேண்டும். இவற்றை செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். செவியின் சுவையுணர வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் என்னும் குறள்கள் குறித்துச் செல்கின்றன. திருவள்ளு வரோ பொறுமைக்கு இருப்பிடமானவர். அவரே செவிச் சுவை புணராது வாய்ச்சுவையையே விரும்புவோர்மேல் சினங்து, அவர் அவிந்தால்தான் என்ன ? வாழ்ங்தால்தான் என்ன என்று வெறுத்துக் கூறியுள்ளார். இதன. நோக் கின் இவ்வின் பத்தின் சிறப்பும் கட்டாயமும் இனிது புலப் படும். .سر ب * - விலங்கொடு ஒப்பு உலகில் மக்கள் (பிழைப்புக்காகக்) தொழில் செப்தன், குளித்தல், உண்ணல், உறங்கல், காமவின்பங் காணல், முதலியவற்றிற் கெல்லாம் தனித்தனி நேரம் ஒதுக்கி யுள்ளனர். அவ்வவ் வேலேகளைச் செய்தும் முடிக்கின்றனர். அதுபோலவே, நூல்களேக் கற்பதற்கும், கேட்பதற்கும். தனி நேரம் ஒதுக்கவேண்டும். இதனை ஒரு கட்டாய மாகவும் கொள்ளவேண்டும். இவ்வின்பம் பெருதோர்க்கும் விலங்கிற்கும் செயலால் ஒருவித வேற்றுமையும் இல்லே. ஒரு காகாமாட்டினே எடுத்துக் கொள்வோம். அதுவும் 3 -