பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உணவுக்காக நாள் முழுமையும் உழைக்கின்றது. குளிப் பாட்டப் படுகின்றது. உண்ணுகின்றது. உறங்குகின்றது: காமவின்பமும் நுகர்கின்றது. ஆனல் அக்காளேக்குக் கல்வி யின்பம் இன்னதென்று தெரியாது. ஆகவே, கல்வி யின்பம் பெருத மனிதர்கட்கு அக்காளேயை உவமையாகக் கூறினல் கண்டிப்பவர் யாவர் ? அதல்ைதான், விலங்கொடு மக்கள் அனையர் இலங்குதுல் கற்குரோ டேனே யவர். என வள்ளுவர் அஞ்சாது கூறிப்போக்கார். தெய்வங்களின் பித்து சுற்றுப் புராண வரலாற்றில் புகுந்து பார்ப்போம். சிவபெருமான் மதுரையில் சோமசுந்தர பாண்டியனக வங்து தோன்றினராம். தேவி, மீட்ைசியம்மையாராக வந்து தோன்றிளைாம். முருகன் உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியனுக வந்து தோன்றினுைம். ஒரு த்ெய்வக் குடும்பமே இங்ங்னம் செய்ததின் காரணமென்ன ? மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு, தாமும் தமிழ் நால் இன்பத்தைப் பெறவேண்டும் என் பதே அவர்களின் கோக்க மாகும். குமரகுருபர அடிகளார். தாமியற்றிய மதுரைக் கலம்பகத்தின் ஒரு செய்யுளில் மேற்கூறியவாறு கயம்பட கவின்று சென்றுள்ளார். - அப்பாடல் வருமாறு: " தமரநீர்ப் புவன முழுதொருங்கு ஈன்குள் தடாதகா தேவியென்று ஒருபேர் தரிக்க வத்ததுவும் தனிமுதல் ஒருநீ சுவுந்தர மாறன் ஆனதுவும் 48 குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டிதுத் தண்டிமிழ் மதுரங் கூட்டுண எழுந்த வேட்கையால் எனிலிக் கொழிதமிழ்ப் பெருமையார் அறிவார். ' இது மிகவும் இனிய பாடல் அல்லவா 1 மற்றும், திருவிளே யாடற் புராணத்தில் உள்ள. ' கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தஇப் பசுந் தமிழ் ' என்னும் செய்யுட் பகுதியும் ஈண்டு ஒப்பு கோக்கத் தக்கது. 做 தெய்வங்களே இங்ங்னம் நூல் இன்பத்தில் பெரும் பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டிருந்தால் மனிதர்க வளாகிய நாம் கல்வியின் பத்தைக் கட்டாயம் விரும்ப வேண்டுமல்லவா ? சிற்றின் பத்தினும் சிறந்தது - w மேலும் இக்கல்வியானது. சிற்றின் பத்தினும் மேலான தொரு ந ஸ் லி ன் ப த் ைத க் கொடுப்பதாகும். அச்சிற் நின்பமோ கிலேயில்லாதது. தொடக்கத்தில் இன்பம்போல் தோன்றுவது. பின்னல் வெறுக்கப்படுவது. அளவுமீறின் நோயையும் கொடுத்துக் கெடுக்கக் கூடியது. எல்லாப் பருவத்தினரும் எப்போதும் பெறமுயாதது. இக்கல்வி யின்பமோ தொடக்கத்தில் முயற்சித் துன்பம் தோன்றினும் பின்னல் பெரும்பயன் தரத்தக்கது. எப்பருவத்தினரும் எப்போதும் நுகரக்கூடியது. எவ்வளவு நுகர்ந்தாலும் வெறுப்பின்றி மேலும் மேலும் விருப்பத்தையே அளிக்கும் ஆற்றல் மிக்கது. - -