பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 தொட்ங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும் மடங்கொன்றறிவகற்றுங்:கல்வி-நெடுங்காமம் . முற்பயக்குஞ் சின்னிர இன்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது o என்னும் நீதிநெறி விளக்கச் செய்யுளே இதற்குச் சான்று. கல்வி யின் பத்திற்குள்ள இவ்விதச் சிறப்பியல்பைக் கருதியே. சுந்தரமூர்த்தி காயர்ை. தமது தேவாரத்தில் கடவுளுக்கு உவமையாக்கிக்கற்ற,கல்வியினும் இனியான” எனக் கல்வியைக் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் வல்லவரும் இன்ப உருவினரும் உயிர்கட்கு இன்பம் அளிப்பவரும் ஆகிய கடவுளுக்கே ஒப்பாக வைத்துப் பேசக் கூடிய பெருமை கல்விக்கு இருக்குமானல் இன்னும் வேறு கூறவும் iேண்டுமோ ? ஆதலின். ஒவ்வொருவரும் இவ்வுண்மைகளே உணர வேண்டும். பிள்ளைகட்குத் திருமணம் செய்து வைப்பதற்கு - முன் கல்வி மணத்தைக் கைகூட்டிவைப்பதே கட்டாயக் கடமையாகும். 'கல்வியே க ற் பு ைட ப் பெண்டிர்' என்பது குமரகுருபரர் கூற்றல்லவா ? 4. வீடு பெறலாம் が森 நான்காவதாகக் கல்வியால் வீடு பெறலாம் (வீடு = மோட்சம்). கல்வியறிவு பெற்ற பெரியோர்களாலேயே எளிதில் வீடு (முத்தி) பெறமுடியும். கல்லாதோர்க்கு இவ்வுலக இன்பமே ஒழுங்காகக் கிடைக்காதிருக்கும்போது அப்பேரின்ப வாய்ப்பு எங்ங்னம் கிடைக்கும் இளமை யிலிருந்தே எழுத்துப் பயின்று கல்வியை வளர்த்தால் வாழ்க்கையில் ஏற்படும் இழிவுகள் தீரவே, மொழியிலும் ால்ல புலமை உண்டாகும். உண்டாகவே, அம்மொழி யறிவைக் கொண்டு சமயநூற்பொருள்களே உணரலாம். 45 உணரவே. உலகக் கட்டுக்கள் நீங்கப் பெற்றுப் பேரின்பு, வீட்டையும் பெறமுடியும். . இன்ன பிற கருத்துக்கள். திருமூலர் திருமந்திரத்தில் உள்ள, "கற்றவர் பேரின்பம் உற்று நின்ருரே' என்னும் பாடல் பகுதியாலும், ஏலாதியில் உள்ள. 'பொய்தீர் புலவர் பொருள் புரிந் தாராய்ந்த மைதீர் உயர்கதி" என்னும் பாடலாலும், நான்மணிக்கடிகையில் உள்ள, " கற்பக் கழிமடிம் அஃகும் மடம் அஃகப் - புற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும் அந்நெறி இப்பால் உலகின் இசைநிறீஇ-உப்பால் உயர்ந்த உலகம் புகும்' என்னும் பஃருெடை வெண்பாவாலும், திருக்குறள் பரிமேலழகர், உரையில் உள்ள, எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தபன் • É o o மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்- மொழித்திறத்தின் முட்டிறுத்த நல்லோன் முதல்நூல் பொருளுணர்ந்து கட்டிறுத்து வீடு பெறும். என்னும் பழைய செய்யுளாலும் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வியால்கான் வீடுபெறமுடியும் என்பதை இச்செய்யுள் நன்கு வலியுறுத்துகின்றது. அல்லவா ? கடவுளேக் குறித்து, "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனி', 'மற்றவர் அறியா மாணிக்கமலை' என்று திருவிசைப்பா என்னும் நாலும் தெளிவுறுத்துகிறது.