பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 யோர்க்கு அடங்கி கடப்பதே பெருமையாகும். அடங்கா மையால் வரும் கேடுகள் பல. அடிக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்பது குறளன்ருே ? வழிபாடு ஆதலின் ஆசிரியச்க்கு அடங்கி அவரை வழிபட்டுக் கற்கவேண்டும். குளிர் காய்பவன் நெருப்பை மிக நெருங் கின் சுடும். மிகவும் எட்டிச் சென்ருலும் குளிரும்; ஆதலின் கடுத்தரமான இடத்திலிருந்தே குளிர் காய்வான். அது போலவே மாணவரும் ஆசிரியரும் அளவுமீறி நெருங்கிப் பழகினல் மதிப்புக் கெடும்; அளவுமீறிப் பிரிந்து கின்ருலும் அன்பு கெடும். ஆதலின் நடுத்தரமாகவே பதிக வேண்டும். ஆனல் கிமுல்போல் விடாது அவரை அடுத்திருக்க வேண்டும். ஆசிரியர் எவ்வெவ் விதத்தில் மகிழ்வாரோ அவ்வவ்விதக் தில் கடந்துகொள்திர வேண்டும். இங்கனம் நெறி தவருது கிற்கும் கிலேக்குத்தான் வழிபாடு என்று பெயராகும். இதனைப் பவனங்தி முனிவரால் இயற்றப்பட்ட கன்னுால் என்னும் இலக்கண நூலிலுள்ள. அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம் அறத்தின் திரியசப் படர்ச்சி வழிபாடே என்னும் நூற்பாவால் உணரலாம். பாடம் கேட்கும் முறை அங் நன்னூலில் பாடங் கேட்க வேண்டிய முறை அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சில மாணவர்கள் 125 கினேத்த நேரத்தில் பள்ளிக்கூடம் செல்வார்கள். ஆசிரி யரை மதியாமல் தாமாகவே அமர்ந்துகொள்வார்கள் : ஆசிரியர் கட்டளையில்லாமலேயே வாயில் வந்ததை உளறிக் கொட்டத் தொடங்கி விடுவார்கள். ஆசிரியர் கற்பிக்கும் பாடங்கள் அவர்தம் செவித்துகளயில் சிறிதும் நுழையா. "எல்லாம் நுழைந்தன ; இன்னும் வால்மட்டுங்தான் துழையவில்லை” என்று ஒருவன் கூறியதற் கிணங்க, மனம் வேறு எங்கெங்கேயோ சென்றிருக்கும். கப்பித் தவறிக் காதில் விழுந்த இரண்டொரு கருத்தையும் அங்கேயே மறந்து விடுவார்கள். ஆசிரியர் போகலாம் என விடை யளிப்பதற்குள்ளாகவே எழுந்து ஒடிவங்து விடுவார்கள். இத்தகைய பிள்ளைகளும் உலகில் இருந்தே தீர்கின்ற னர். இங்ங்ணம் நடத்தலாகாது. குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்; சென்றதும் ஆசிரியர்க்கு வணக்கம் செலுத்த வேண்டும்; அவர் சொல்லிய இருக்கை யில் அமரவேண்டும் அவர் கட்டளையிட்ட பிறகே, ஏதே னும் ஒப்பிப்பதையோ படிப்பதையோ செய்ய வேண்டும். வேறெங்கும் மனத்தைச் செலுத்தாது ஒவியம் போன் றிருந்து பாடங்களே உற்றுக் கேட்க வேண்டும். கோடைக் காலத்தில் உச்சி வேளையில் மிகுந்த காகம் கொண்டவன் மிக்க ஆர்வத்தோடு கண்ணிர் பருகுவதுபோல ஆசிரியர் சொல்லும் பாடமாகிய உணவைச் செவியே வாயாகவும் நெஞ்சே வயிருகவும் கொண்டு கேட்டு உண்ண வேண்டும். கேட்ட பாடங்களே மறக்கவிடாமல் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். ஆசிரியர் போ' என விடையளித்த பின்பே வீட்டுக்குப் புறப்பட வேண்டும். இங்ங்னம் ஆசிரியன் தன்மைக்குக் தக்கபடிப் பழகி அவர் குறிப்பின் வழி நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவ ரின் தேவையறிந்து கல்வியுணவை ஊட்ட வேண்டும் : இக் கருத்துக்களே, அங்கன்னூலிலுள்ள,