பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கோடில் மரபே கூறுங் காலப் பொழுதொடு சென்று வழிபடில் முனியான் குணத்தொடு பழகியவன் குறிப்பிற் சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச் செவிவாய் ஆக தெஞ்சுகளன் ஆகக் கேட்டிலை கேட்டு அவை விடிாது உளத்தமைத்துப் பேசவெனப் போதல் என்மனுச் புலவர் என்னும் நூற்பாவால் நன்குணரலாம். இவற்றையெல் லாம் பழங்கால (கர்நாடக) விகிகள் என்று தள்ளிவிட முடியாது. கற்காலக்கிலும் மாணவர்கள் கடந்துகொள்ள வேண்டிய நடைமுறை விதிகள் பெரும்பாலான இவற்றைப் போன்றே பள்ளிக்கூட அறிக்கைகளில் வெளியிடப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். ஆதலின் மாணவர்கள் இம்முறையில் பாடங்கேட்டுப் பயன்பெறு வார்களாக. இவ்விதம் கற்கும் கல்வியே விரைவிலும் வேரூன்றிப் பதியும். பின்னின்றும் கற்க பொதுவாக உலகத்தில் மானத்தோடு வாழ விரும்பு பவர்கள் ஒருவர்க்குப் பின்னின்று கையேங்தமாட்டார்கள். அங்கிலக்குப் பெரிதும் நானுவார்கள். ஆனல் கல்வியைப் பொறுக்கமட்டிலும் அப்படியிருக்க முடியாது. இருப்பதும் அறிவுடைமையாகாது. ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் ஒருவன் எல்லாம் உடைய செல்வர் முன்பு குழைந்தும் பனிங்தும் கின்று ஒன்றைக் கேட்டு வாங்குவான். அது போலவே மாணவரும் ஆசிரியர் முன்பு பணிந்து கின்று பாடங்கேட்க வேண்டும். அவரே சிறந்தவராவர். மேலும் ஆசிரியர்க்கு ஒரு துன்பம் உற்ற காலத்தில் உடனிருந்து 127 உதவவேண்டும். தாம் செல்வராயிருப்பின் ஆசிரியர்க்குப் பொருளும் கொடுத்து உதவலாம். ஆனல். நன்மை ஒன்றும் செய்யா விடினும் கிமையாவது செய்யாமல் இருப் பது நல்லது. மற்றும், தாம் ஒன்றும் இல்லாத எண்ழயாய் இருப்பின் பிச்சையெடுத்தாயினும் கற்கவேண்டும். இங் ங்னமாக ஒருவரின் பின்னிற்கும் கிலேக்குச் சிறிதும் வெட்கப் படக் கூடாது. கல்வியானது அச்சிறுமைகளையெல்லாம் மறைத்துப் பின்னல் பெரிதும் விளக்கங் தங்து பெருமைப் படுத் து:ம் : இக் கருத்துக்களே உட்ையார்முன் இல்லாச்போல் ஏக்கத்தும் கற்ருச்: கடிையரே கல்லா தவர். என்னும் திருக்குறளானும், உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் கன்றே என்னும் புறநானூற்ருனும், கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்னும் வெற்றிவேற்கையானும் உணரலாம். எனவே பிள்ளைகள் ஒவ்வொருவரும் கல்விக்காகத் தம் இளமைப் பருவத்தினையே விட்டுக் கொடுத்துக் (தியாகஞ் செய்து) கற்று விளக்கம் பெறுவார்களாக.