பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நூலொடு பழகிய பெண்ணுகிய ஒளவையாரின் அறிவு பேதைமை உடையதா? ஏனய பண்டைப் பெண்புலவர் கன்ரின் அறிவைத்தான் அங்ங்னம் கூற முன்வர முடியுமா? அவர்கள்ன் அறிவுரைகள் எல்லாம் ஒதுக்கியா தள்ளப் பட்டன: அனைவராலும் விரும்பியேற்றுப் போற்றப் பெறு கின்றன அல்லவா? இயற்கையறிவும் செயற்கையறிவும் எனவே, எதையும் உணர்ந்து செய்யும் மதிநுட்பம் இருக்க வேண்டும். இயற்கை அறிவாகிய மதிநுட்பத்தோடு செயற்கையறிவாகிய நூலறிவும் ஒருவர்க்கு ஒருங்கு இருக்கு மாயின் அவரை வெல்வாரும் உண்டோ? அவர் திறமைக்கு முன் சிற்கும் வேறு பிற திறமைகளும் உள்ளனவோ? இல்லவேயில்லை. இக்கருத்தையே, "மதிநும்பம் நூலோ டுடிையார்க் கதினுட்பம் யாவுன முன்னிற் பவை' என வள்ளுவப் பெருந்தகையாரும் வற்புறுத்திப் போக்து ளார். இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள உணர்ச்சி என்பது இயற்கை யறிவை ஒட்டியே ஏற்படுவதாகும். ஆத வின், ஒவ்வொருவரும் மறைந்து மங்கிக் கிடக்கும் தம் இயற்கையறிவைத் தூண்டி ஒளிபெறச் செய்ய வேண்டும். நூலறிவைக் கொண்டாயினும் வளம்பெறச் செய்ய முயலல் வேண்டும். அப்போதுதான் உணர்ச்சிச் சுடர் எங்கும் விசும். கல்வியின் அளவு கருவிகள் மற்றும் ஒருவரை, உணர்ந்து கற்றவர் என்பதையும், உணராது கற்றவர் என்பதையும் எளிதில் அளங்து விடலாம். அதற்குஇரண்டு அளவு கருவிகள் உள்ளன. அவை (1) புலமைத்திறமை.(2) ஒழுக்கம் உடைமை என் பனவாகும். இவ்விரண்டும் முன்னரே ஒரிடத்தில் குறிப் பாகக்குறிப்பிடப்பட்டுள்ளன. (1) புலமைத் திறமை கற்ருேர் சிலரை நோக்கி, ஏதேனும் ஒன்றைப் பற்றிச் சிறிது சொல்லும்படி கேட்போமேயானல், நாம் ஏமாங்து போக வேண்டியவர்களாய் உள்ளோம். ஏன்? அவர்கள் கூறுவதென்ன? "படித்து நாளாய் விட்டது ; எல்லாம் மறந்து பேர்ய்விட்டின; குடும்பத் தொல்லையில் அவற்றையெல்லாம் எங்கே ஐயா, புரட்டி முடிகின்றது ? எல்ாைம் அவ்வமயத்தோடு நின்று விட்டன” என்று இரங்கத்தக்க சிலையில் பதில் அளிக் கிண்ருர்கள். எனவே, அவர்கள் தாம் கற்ற நாற்களில் ஒரு விதப் புலமைக் திறமையும் அடையவில்லை என்பது பெறப் படும். அதற்கு ஏற்ற காரணம், உணர்ந்து கற்காக பெருங் குறையே யல்லவா? *.