பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


153 அவைக் கோழைகள் சிலர், படித்த இரண்டொரு கருத்தை மறவாமல் கினே வில் வைத்திருந்தாலும் சபைக் கோழைகளாக உள்ளனர். பிறர்க்கு எடுத்துச் சொல்லும் வகையறியாதும் விழிக்கின்ற னர். இவ்வித உணர்ச்சியில்லாக் கோழைகள் பல கற்றும் பயனில்லே. இவர்கள் கல்லா காரைக் காட்டினும் கடைப் பட்டவராவார்கள். இ த் தி ற ைம உள்ளவர்களோ, கற்றவர்க்குள்ளேயே மிகச் சிறந்தவராகக் கருதப்படுவார் கள். மேலும், கோழை ஒருவன் கற்ற நூல், பேடி கை வாளே ஒக்கும். பேடிக்கும் வாளுக்கும் பயன் தருவதில் என்ன தொடர்புளது? அதுபோலவே, கோமுைக்கும் நாலுக்குங்தான் தொடர்பென்ன உளது ஒன்றும் இல்லை யல்லவா? இன்னும் இவர்க்கு, மலர்ங்தும் மணம் வீசாத பலரையும் ஒப்பாகக் கூறலாம். மேலும் இவர்கள், உலகில் உயிருடன் இருந்தாலும் இறங்கவராகவே கருதப்படுவார் கள். இவையெல்லாம் சற்றும் வெற்றுரை யாகா. இவற்றை, "கல்விக் கழகு கசடற மொழிதல் என்னும் வெற்றிவே ற்கையானும், 'கற்ருருள் கற்ருர் எனப்படுவர் கற்ருர்முன் கற்ற செலச்சொல்லு வார்' "வாளொடென் வன் கண்ணர் அல்லார்க்கு நூலொடிென் துண் ணவை அஞ்சு பவர்க்கு" "பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்(து) அஞ்சும் அவன் கற்ற நூல்' "இணர் ஊழ்த்தும் நாரு மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார்" i 53 'உனர் எனினும் இல்லாரோ டிொப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச் சொல்லா தார்" என்னும் திருக்குறள்களாலும், "மாருத கலகற்றும் நிலைபெற்ற சபையிலே, வாயிலாதவன் ஒரு பதர்' என்னும் அறப்பளிச்சுர சதகத்தாலும் தெள்ளிதின் உணர லாம். - . பொன்மலர் காற்றம் "சொல்வன்மை இன்றெனின் என்னும் அஃதுண்டேல் பொன்மலர் நாற்றம் உடைத்து' என்னும் குமரகுருபரர் கூற்றின்படி, கல்வியோடு சொல் வன்மையும் கூடியுள்ள புலமையே பொன்மலர் கூட மண மும் பெற்றவாறு போலாகும். அப் புலமைத் திறத்தின் ஒளியைக் கொண்டு அவரையும் உணர்ந்து கற்றவராகக் கருதவும் முடியும். ஈண்டு. "கற்றதுடைமை காட்சியின் அறிப" என்னும் முதுமொழிக் காஞ்சிப் பாடலும் ஒப்புகோக்கம் பாலது. எனவே, ஒவ்வொருவரும் உணர்ந்து கற்றுக் தமக் கும் பிறர்க்கும் பயன்படும் அளவில் புலமைக் திறமை நிரம்பப் பெற்று விளக்கமுறுவார்கள். (2) ஒழுக்கம் உடைமை இரண்டாவதாக கல்லொழுக்கம் இருக்க வேண்டும். மனத்தால் நல்லனவற்றை எண்ணுதல், வாக்கால் கல்லன. வற்றைப் பேசுதல், உடலுறுப்புக்களால் கல்லனவற்றைச் செய்தல் என்னும் இவற்றிற்குத்தாம் நல்லொழுக்கம் 10