பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

படைக்கலம் வழங்கு நெறிக்கண்,வெடி மருந்தாற்றலும் அத்துணை விரைவுடையதன்று என உணர்ந்து, அணுவாற்றலும், நெய்யாவி நீராவி போலும் ஆவி ஆற்றல்களும் முழுக்க முழுக்க மேற்கொள்ளப்படும் இக்காலப்போர் முறையைக் காட்டிலும், வாளும் வேலும் வில்லுமே படைக்கலங்களாகப் பயன்படுத்தப் பெற்ற பண்டைக்காலப் போர் முறையிலேயே மக்கள் ஆற்றல் மிகவும் தேவைப்பட்டது. ஆகவே,போர்முறை அறிந்து படைக்கலங்களே வழங்கவல்ல பெருவலியும் பருவுடலும் வாய்ந்த வீரர்களைத் தேடிப் பெற்றுப் பேணிப்புரந்து வந்தார்கள் பண்டைக்காலக் காவலர்கள். அப்பெருவீரர்களின் பேராண்மையினைப் பாராட்டிப் பாக்கள் புனைந்து பெருமை செய்தார்கள் புலவர்களும். இவ்வாறு, அரசர்கள், பொன்னும் பொருளும், நன்செய்யும் புன்செய்யும் வழங்க ஆன்றோர்கள் பண் இசைத்தும் பா அமைத்தும் புகழ்மாலை சூட்ட,உலகம் தம்மை மதித்துப் பெருமைசெய்கிறது என்பதை அவ்வீரர்கள் உணர்ந்து கொண்டமையால்,அத்தகு பெருவீரம் வழிவழிப்பெருகி ஊழிஊழி வாழ வேண்டும் என்பதில் ஆர்வம்காட்டி, வீரர்குலம், மறவர் மரபு என்ற ஒரு தனி இனமே தழைக்க வழிவகுத்து வைத்தார்கள் பண்டைப் படைக்காவலர்கள்.

படையில் பணிபுரிவார் ஒவ்வொருவரும் படைத் தொழில் வல்லவராக விளங்க வேண்டும் என்பதில் விழிப்பாயிருந்தே தேர்ந்து கொள்வதால், அவர்கள் அனைவருமே ஆற்றல் மறவறாக விளங்குவர் என்றாலும் அவர்தம் ஆற்றல் அனைத்தையும் ஒருவழிப் படுத்திப் பணிகொள்ளவல்ல படைத்தலைவன் ஒருவன் இல்லானாயின்,ஆயன் இல்லா ஆனிரை போல்,அவ்வீரர்தம் ஆற்றல் அனைத்தும் சிதறுண்டு சீரழிந்து போய்விடுமாதலின், அப்போர்வீரர்களைப் பணிகொள்ளவல்ல