பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 மலேகாட்டில் அடுத்தடுத்து இருக்கும் எண்ணற்ற குன்றுகளில் குருவிக்கூட்டம் எள் விழ இடம் இன்றி அமர்ந்திருப்பதுபோல், அடுக்கடுக்காக இ ற ங் து வீழ்ந்து கிடக்கும் யானைகளின் உடலெங்கும், பழை யன் ஏவிய அம்புகள் ஆழத் தைத்துக் காட்சி அளித் தன ஒருபால். போரூர்க் கடைவீதிகளில் நவமணி வணிகர், மாணிக்க மணிகளே இட்டு வைக்கும் பைகளை அவிழ்த்து மாணிக்க மணிகளைக் கொட்டுவதுபோல், வாள்ால் வெட்டுண்ட யானைகளின் துதிக்கைகளி விருந்து செங்கிறக் குருதி சொரிந்து கொண்டிருந்தது களத்தின் ஒரு கோடியில். பழையன் எறிந்தவேல், தன் நெற்றியில், தன் னுடைய இரண்டு வெண்கோடுகளுக்கும் இடையில் தைத்து, ஒரு பாதி ஆழ்ந்துபோக, மறுபாதி மட்டும் வெளியில் விளங்க உலாவரும் யானே, முக்கோட்ட களிறுபோல் காட்சி அளித்தது களத்தின் நடுவண். வானத்து வெண்மதியை விழுங்கிக் கிடக்கும் கரும் பாம்புபோல், ஒடிங்து வீழ்ந்து கிடக்கும் வெண் கொற்றக் குடையை யொட்டி, வெட்டுண்டு விழ்ந்த யானையின் நீண்ட துதிக்கை காட்சிதரும் கொடுமை யைக் களம் ஒருபால் காட்டிற்று. - செவ்வானத்தின் இடை இடையே, கருமேகம் குவியல் குவியல்களாகக் காட்சி அளிப்பதுபோல், வீரர்களின் உடல்களிலிருந்து பெருகி ஒடும் குருதி வெள்ளத்தின் இடை இடையே, இறந்துவீழ்ந்த யானேகளின் கரிய உடல்கள் மிதக்து சென்றன. வெண்வேல மரங்கொண்டு செய்த கலப்பையால், செம்மண் கிலத்தை உழும் உழவன்போல், தன் வெண்கோடுகள் இரண்டும், குருதி பாய்ந்து செங்கிறம் த-7 -