பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெற்ற களத்து மண்ணில் ஆழப் புதைந்துகொள்ளத், தலைகவிழ்ந்து கின்றது ஒரு களிறு, பிணவாடை கண்டு பறங்துவங்து சேர்ந்தன பருந்துக் கூட்டம். ஐந்தலே நாகத்தை வாயில் கவ்வி விண்ணில் எழும் கருடனப்போல், ஐந்து விரல்களும் விரிந்துகிடக்க,அறுபட்டு வீழ்ந்த வீரர்களின் கைகளில் ஒன்றை வாயில் கவ்விப் பறந்தது ஒரு பருந்து. போர்ப் பறைக்குத் தோல் போர்த்து வார்கொண்டு வலித்துக் கட்டும் முரசறைவான் போல், குருதிசொட்ட வீழ்ந்து கிடக்கும் பிணத்தின் குடல்களைப் பற்றி ஈர்த்துக் கொண்டிருந்தது ஒரு பருந்து. பருந்தோடு விருந்துண்ண வந்து சேர்ந்தன. நரிகள். பெருங்குடிச் செல்வர், தம் முக அழகைக் காண்டற் பொருட்டு, அவர் கீழ்ப் பணிபுரியும் குற்றேவலர் கண்ணுடி ஏங்தி விரைவதுபோல் கைப் ப்ற்றிய கேடகத்தோடு வீழ்ந்த கையைக் கவ்விக் கொண்டு, காடு கோக்கி விரைந்தோடிற்று ஒரு குறு நரி, வேட்டைக்காரர் வீட்டுக் கம்பத்தில் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடங்கும் கோய்ைபோல், வேல் தைத்த புண்ணிலிருந்து வெளிப்பட்டுத் தொங்கும் குடரை வலித்து ஈர்த்துக்கொண்டிருந்தது மற்ருெரு குறு கரி. புயற் காற்றுப் புகுந்து வீசிய பனங்தோப்பில் பனங்காய்கள் பார்க்குமிடமெங்கும் சிதறிக் கிடப்பது போல், போர்க்களம் எங்கும் வெட்டுண்டு வீழ்ந்த வீரர்களின் தலேகள் சிதறிக் கிடங்தன. மக்கள் ம்னம் மகிழ மாலையில் உலாவரும் இளமரக்காவில், குருவளிக் காற்று சுழன்றடிக்கக் கண்டு அச்சோலேவாழ் மயிலி னங்கள் மருண்டு ஓடுவது போல், கணவரை இழந்த காரிதையர் அக்களத்தில் கண்ணிர் சொரிந்து சித்றிப் புலம்பினர்." .