பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கண்கள், சினத்தால் மேலும் சிவந்து விட்டன. 'என் படைத் தலைவன் உயிரைப் பறித்த அக்கணேயனேக் கட்டிப் பிடித்து வந்தாலல்லது என் சினம் தணியாது’ என வஞ்சினம் உரைத்து விரைந்து புறப் பட்டான்; கழுமலக்களம் அடைந்தான். கடும்போர். ஆற்றிக் கணேயனேக் கட்டிப் பிடித்துவங்து, குட வாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்துப் பழை யனேக் கொன்ற பெரும் பிழைக்குப் பழி தீர்த்துக் கொண்டான். கணேயன் வில்லால் வீழ்ந்துபோன பழையன், புலவர்களின் சொல்லால் வீயாப் புகழ்பெற்று விளங்கி ன்ை. குடவாயில் கீரத்தனரும், பெரும் புலவர் பரணரும், பழையன் வில்லாண்மையினேயும், வெற்றிப் புகழ்களையும் பாடிப் பாராட்டினர்கள். அவர் பாடிய பாக்கள் பலவற்றுள், பழையன், கழுமலப் போரில் காட்டிய பேராண்மையைப் புகழ்வது இப்பாட்டு. நன்னன் ஏற்றை, நறும்பூண்அத்தி, துன்னரும் கடுந்திறல் கங்கன், கட்டி, பொன்அணி வல்வில் புன்றுறை என்ருங்கு அன்று அவர்குழீஇய அளப்பரும் கட்டுர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டு அதுகோளுைகித், திண்தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையலம் கண்ணிப் பெரும்பூண் சென்னி,"