பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மத்தி கன்னிக் காவிரி கடலோடு கலக்குமிடத்தில், அக்காவிரிக் கரையில் கழார் என்ற ஒரு பேரூர் இருந்தது. சோணுட்டின் தலேநகராகவும், தலைசிறந்த வாணிக நிலையமாகவும் விளங்கிய புகார் நகரத்திற்கு நான்கு அல்லது ஐந்துகல் தொலைவில் இருந்த அவ்வூர், சோணுட்டு மக்களின் சிறந்த புனல் விளையாட்டிடமாய் விளங்கிற்று. காவிரியாறு தன்போக்கின் பெரும் பகுதியைச் சோணுட்டிலேயே கழிக்கிறது என்ருலும், கழார் நகர் அருகே காணப்படும் அதன் போக்கே கவின்மிகு காட்சியாகும். வஞ்சி மரங்களும், மருத மரங்களும் வரிசை வரிசையாக வளர்ந்து வனப்பு மிகுந்த ஆங்குக், காவிரிக்குப் படித்துறை அமைத்திருந்தார்கள் அவ்வூர் மக்கள். அவ்வூர் வாழ் இளம் மகளிர் இடையில் இலே ஆடையும், கைகளில் குறுவளேயும் அணிந்து, ஒன்று திரண்டு வங்து, காவிரிப்புனலில் குதித்து ஆடுவர். அவ்வாட்டத்தில் வெறுப்புச் சிறிது காணின், உடனே கரையேறி, அருகேயுள்ள பொய்கைகளில் வளர்க் திருக்கும் கோரைகளேப் பறித்துக் கரங்தை வளரும் கழனிகளில் அமர்ந்து, இரைதேடும் பறவைக் கூட்டங் களே ஒட்டி மகிழ்வர். இளங்காதலர்கள் இணை இணையாக வந்து, பெருகிவரும் புது வெள்ளத்தில், விடியற் போதில் விருப்பங்திர ஆடி அகம் மகிழ்வர். காவிரியில் புதுவெள்ளம் வருங்காலத்தில், அக் கழார்த் துறையில் ஆண்டுதோறும் புனல்விழா நடை பெறும். அவ்விழா, சோழ அரசர்களும் வந்து கானும்