பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சிறப்பித்தான். சோழர் படைத் தலைவய்ைப் பணி புரிந்து கொண்டிருந்தான் மத்தி. ~ ஒருநாள், அரசன் தன் படை வகைகளைப் பெருக்க விரும்பினன். கால்வகைப் படையுள், அக்காலப் போர் முறையில் பெருந்துணே புரிவது வேழப் படையே ஆதலின், அதைப் பெருக்குவதில், அரசன், தன் கருத்தை முதற்கண் செலுத்தினன். வேழ வேட்டத் திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முடித்தான். படைத் தலைவர் அனேவரையும் உடன்வரப் பணித் தான். மத்தி முதலாம் படைத் தலைவர் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், எழினி என்பான் ஒருவன் மட்டும் கலந்து கொண்டிலன். அஃதறிந்து சினம் கொண்டான் சோழன். ஆனால், அவன் ஒருவன் வாராமைக்காக வேழ வேட்டையைக் கைவிட்டா னல்லன். மத்தி ஒருவன் இருந்தால் போதும், வேட் டையில் வெற்றி காணலாம் என்ற துணிவு இருந்தமை யால், வேட்டை மேற்கொண்டு சென்ருன். காட்டுள் புகுந்து குழிகளே வெட்டி அக்குழிகளில் வேழங்கள் வந்து விழும்படிச் செய்து, அவ்வாறு வீழ்ந்த வேழங்களே விலங்கிட்டு ஒன்று சேர்த்தான். கன்று களும், களிறுகளும், கன்றுகளைப் பிரியாப் பிடிகளு மாக எண்ணிலா வேழங்கள் அகப்பட்டன. காடு வங்து சேர்ந்தான் மன்னவன். - நாடு சேர்ந்ததும், ம ன் ன வ ன் மத்தியை அழைத்து, தம்மை மதியாத எழினியின் ஆணவத்தை அடக்கிவருமாறு பணித்தான். எழினி, எங்கோ தொலே காட்டில் பெரும் படையோடு வாழ்ந்திருந்தான். மத்தி, அவன் வாழிடத்தின் சேய்மையினேயோ, அவன் பெற் றுள்ள படைவன்மையினையோ மதியாது புறப்பட்டுச் சென்ருன். மத்தியின் வருகையையும், மன்னவன் ஆணேயையும் அறிந்த எழினி, பெரும்படையோடு வந்து மத்தியை எதிர்த்தான். ஆனால், மத்தியின் ஆற்.