பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 |றல்மு ைஅவன்படை, வலியிழந்து அழிந்தது. எழினி யைக் கைப்பற்ற, மத்தி, நெடும்பொழுது போர்புரிங் தானல்லன். போர் தொடங்கிய சிறிது நாழிகைக் கெல்லாம் அவனைச் சிறைசெய்தான். அவன் பற்களைக் கொட்டி உதிர்த்தான். எழினி ஆணவம் அழிந்து அடங் கின்ை. எழினியின் வெண்பற்களோடு வீடு திரும் பினன் மத்தி. மத்தியின் ஆற்றல் கண்டு, அவனைப் பாராட்டிச் சிறப்புச் செய்தான் மன்னவன். மத்தி, தான்பெற்ற வெற்றியை காட்டு மக்கள் என்றென்றும் மறவாது மனத்திடை வைத்துப் பாராட்ட வேண்டும் என விரும்பினன். அதனல், வெண்மணிவாயில் எனும் ஊரில் உள்ள தன் அரண் கதவில் அப்பற்களே அழுத்தி வைத்தான். அவ்வூர் அழிகே ஒடிய காவிரிக் கரையில், தன் வெற்றியின் நினைவுச் சின்னமாய்க் கற் களால் படித்துறை ஒன்று அமைத்தான். அரும்பாடு பட்டுப் பெற்ற வெற்றி மறைந்து அழிந்து போகாது, கின்று விளங்க நினைவுச்சின்னம் எழுப்பும் நிலையை அன்றே நாட்டிய மத்தியின் அறிவுகண்டு, அக்காலப் பெரும்புலவராகிய மாமூலனர், அவன் அருஞ்செயலேத் தம் பாட்டிடைப் பார்ாட்டி அழியா நினைவுச்சின்னம் ஒன்றை ஆக்கியுள்ளார். மத்தி நாட்டிய நினைவுச் சின்னம் நிலைகுலைந்து விட்டது. ஆனால், மத்தி குறித்து மாமூலனர் எழுப்பிய நினைவுச்சின்னம் இன்றும் கின்று அவன் புகழ் பாடுகிறது. ' குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருகிரை பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக், கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி நெடுஞ் சேணுட்டின் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல்எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை."