பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அறுகைக்கு நேர்ந்த அழிவினே அறிந்தான், அவன் ஆருயிர் நண்பனகின சேரன் செங்குட்டுவன். இரு வர் உள்ளமும் ஒன்று படுதலே சிறந்த நண்பர்களின் உயர்ந்த உடமையாகும். ஆகவே புணர்ச்சியும் பழகு தலும் ஆகிய அவையிரண்டினுக்கும் அவ்விருவரி, டையே வாய்ப்பில்லாது போயினும் கேடில்லே என்ற உயர்ந்த உண்மையை உணர்ந்தவன் செங்குட்டு வன். அதனல் எளிதில் அடையலாகச் சேனெடுங் தூரத்தில் சென்று வாழினும், என் சிறந்த நண்பர் களுள் அறுகையும் ஒருவனவன் என உளத்திடை மதித்தான். அதனால் அவனுக்கு நேர்ந்த கேட்டினைத் தனக்கு நேர்ந்த கோடாகக் கருதின்ை; அவன்பழி, தன் பழி, அவன் பகைவன், தன்பகைவன் என மதித் தான். அவ்வளவே, பழையனே வெற்றி கொண்டு, கண்பன் பழி துடைக்கப் போர்முரசு கொட்டி விட்டான். . செங்குட்டுவன் சினங்கொண்டு புறப்பட்டு விட் டான் என்ற செய்தியறிந்தான் பழையன். செங்குட்டு வன் சிறந்த வீரன், பெரிய படையுடையான், அரசுபல அழித்த ஆண்மையுடையான் என்பதை அறிந்திருங் தான். அதல்ை அவனைத் தனித்து நின்று எதிர்க்கத் தயங்கினன். அங்கிலேயில் அவனுக்குத் துணேபுரியத் தமிழரசர் சிலரும் தாமே முன் வங்தனர். சேரகாட்டு அரசியல் வாழ்வில் செங்குட்டுவன் காலடியிட்டுள்ள தையும், அவன்படை வன்மையால் சேரர் பேரரசு பல திசைகளிலும் பெருகி வருவதையும் அறிந்து, அது பொருது, வளர்ந்துவரும் அவ்வரசை அழிக்கும் வழிவகைகளை எண்ணிக் கொண்டிருந்தனர், அக்காலே அரியணையில் அமர்ந்திருந்த சோழனும், பாண்டி யனும். அங்கிலையில் செங்குட்டுவன் மோகூர் நோக்கிப் புறப்பட்டு விட்டான் என்ற செய்திவரவே, அவர்கள் இனியும் வாளா இருத்தல் கூடாது எனத் துணிந்தனர். உடனே தம் ஆட்சிக்குட்பட்ட ஏனைய வேளிர்