பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 களையும் ஒன்று திரட்டினர். எல்லோருமாகப் புறப் பட்டு மோகூர் அரண்வந்து அடைந்தார்கள். பேரரசர் படைகளோடு பிற வேளிர்களின் படைகளும் துணையாக வந்து சேரவே, பழையன் உள்ளத்தில் துணிவு பிறந்துவிட்டது. இப்பெரிய முன்னணியை முறியடிக்கும் முழுவலிமை கொங்கு காட்டுக் கொற்றவனுக்கு இராது என எண்ணி இறுமாந்தான். குட்டுவன் படைகளே வெட்டி வீழ்த்து வோம் எனக் குருதி தொட்டுச் சூளுரைத்தது கோசர் l–JGÖDÉ– • அங்கிலேயில் சேரர் படை வந்து சேர்ந்து விட்டது" செங்குட்டுவன், பழையன் செருக்குக்குப் பெரிதும் துணே நிற்பது, பகைவர்க்குப் பணியா மோகூர் அரண் அமைப்பே என அறிந்து, எடுத்த எடுப்பிலேயே அரண் அழிவில் கருத்தைப் போக்கினன். அதனல் போர் தொடங்கிய சிறிது பொழுதிற்கெல்லாம் கோட்டை பாழ்பட்டது. வளமார் தமிழகத்துள் வடவர்படை புகாதபடி வென்று துரத்திய விழுச் சிறப்பு வாய்ந்த மோகூர் அரண் வீழ்ந்து விட்டது. அரண் வீழ்ந்துவிடவே, அடங்கியிருந்தவர் புறம் போந்து போரிட்டனர். மன்னர்களின் முன்ன முறிந்து போகும்படி உரங்கொண்டு போராடினன் செங்குட்டுவன். இருதிறப்படை வீரர்களும், தங்கள் தங்கள் ஆற்றல்களே யெல்லாம் காட்டிக் கடும் போரிட்டனர். பழையன் வெற்றிக்குப் பெருந்துணை புரிவது, அவன் கீழ்ப் பணிபுரியும் கோசர் படையே என அறிந்து, அப்படையை வளைத்து அருஞ்சமர் புரிந்தது சேரர் படை. கோச வீரரும் தம் கொற்றத்தை நிலைநாட்ட நெடும்போர் புரிந்தனர். ஆயினும் கொங்குகாட்டு வீரரின் வில்லாற்றல்முன் கோசரின் கொற்றம் நிற்க முடியவில்லை. கோசர்படை அழிவுற்றது. அவ்வீரர் உடலிலிருந்து வெளிப்பட்டு