பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வில்லவன் கோதை "இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகனய், சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் இயற்றிய இளங்கோ வடிகளாரின் உடன் தோன்ற லாய்ப் பிறந்து, பீடும் பெருமையும் பெற்றுப் பேரரசு செலுத்திய சேரர்குலச் செம்மல் செங்குட்டுவன் பெற்ற வெற்றிகள், அம்மம்மா அளவிறந்தனவாம்!” என வியங்து பாராட்டுவர் புலவர் பல்லோர். சேர நாட்டுக் கடல் வாணிகம் செழிக்கப் பொன்னேயும் மணியையும் கொணரும், மேலேகாட்டு வங்கங்கள் வரும் வழியிடைத் தீவுகளே, வாழிடமாக் கொண்டு, அக்கலங்களைக் கொள்ளையிட்டுக் கொடுமை புரிந்து வந்த கடம்பர்களேக், கடற்படைத் துணேயால் வென்று அடக்கி, அவர்தம் காவல்மரமாம் கடம்பை வெட்டி வீழ்த்தி வீறுபெற்ருன் அவ் வேங்தன்” எனவும், . -- "கொடுகூரைத் தலைநகராக் கொண்ட, தன் அண்டை காட்டு வாழ்வினராம் கொங்கர், தன் குலப் பகைவர்களாம் சோழ பாண்டியர் இருவரும் படைத் துணை அளிக்கின்றனர் என்ற செருக்கால், தன்சீனப் பகைப்பது கண்டு, அவர் மீது போர் தொடுத்து, அவர்தம் போர்ப் புண் கொட்டும் குருதி வெள்ளத் தால் போர்க்களம் செங்களமாகி, அந்திக் காலத்துச் செவ்வான் என அழகு காட்டுமாறு, பெரும் போர் புரிந்து வென்று பரணி கொண்டான் அப் பெரியான்'