பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கொண்டு அவன் உயிர் தேடுவாள் போல் அவைேடு உயிர் நீத்த கோப்பெருங்தேவியார், கணவன் கொலையுண்ணக் கடுஞ்சினம் கொண்டு, கோவலன் குற்றமிலன்; கோமக்னே அது புரிந்தான்; ஆகவே அழித்தேன் மன்னைேடு மதுரையையும்; ஆகவே குற்ற மிலேன்'யான் எனக் கூறியவாறே நம் நாடடைந்த நங்கை ஆகிய இவ்விருவருள் சிறந்தார் யார்” எனத் தன்மனேவியாம் இளங்கோ வேண்மாளை வினவ, 'கன வைேடு உயிர் துறந்த காரிகை கடவுட் பெறுகில் பெறுக தனக்குற்ற துயரை நமக்கு உரைப்பாள் போல் 5ம் நர்டடைந்த பத்தினிக் கடவுளுக்குக் கோயில் அமைத்து வழி படுவோமாக’ என்று அவள் விடையிறுக்க, அது கேட்ட அவன், அமைச்சர் கருத் தறியும் குறிப்பினய்ை அவரை நோக்க, “இமயத்தில் கொண்டு கங்கையில் நீராட்டப் பெறும் கல்லும் கடவுள் ஆதற்குப் பொருந்தும்; பொதிகையில் கொண்டு காவிரிப் புனலில் நீர்ாட்டப் பெறும் கல்லும் கடவுள் ஆதற்குப் பொருந்தும்” என்று அவர்கள் கூறினராக, வட இமயப் பெருமலையில் கொள்வதை விடுத்துத் தென் தமிழகத்துப் பொதிகையில் கொள் வது வாள் வீரர் வ்ழி வந்த என்போல்வார்க்குப் பொருந்துவது அன்று; ஆகவே கண்ணகிச் சிலேக்கு ஆம் கல்லே இமயத்திற் கொள்ளவே துணிந்தேன்; இமயப் பேரர்சன் இண்ங்காது மறுப்பாயிைன் வஞ்சி குடி வாள் எடுத்து வடநாடு புகுவோமாக!' என்று. வஞ்சினம் வழங்கி வெஞ்சினம் கொண்ட காலே, அவன் அருகே வீற்றிருந்த வில்லவன் கோதை, "வாழ்க வேங்தே! வாழ்க நின் கொற்றம்' என வாழ்த்துரை வழங்கி, நின்னைப் பகைத்து கின்ைேடு. போரிட முன்வங்த சோழனும், பாண்டியனும் ஆகிய பேரரசர் இருவரும் தோற்றுப் புறங்காட்டிஓடியது கொங்கு நாட்டகத்துப் போர்க்களத்தில் என்ருலும், அச்செய்தி எட்டுத் திசை அரசர்க்கும் அன்றே எட்டி