பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 விடாது; வெஞ்சமர்க்குப் பின்னரே அது தன்னைத் தஞ்சம் அடையும் என்ற உணர்வும் ஒருபால் உருவெடுக்கவே, புலிகேசி முன்னேயினும் பெரும் படையைத் திரட்டவும், முன்னேய போர் முறையோடு முற்றிலும் வேறுபட்ட புதிய போர் முறையினே மேற் கொள்ளவும் துணிந்து அதற்கேற்பச் செயல் படத் தொடங்கினன். சாளுக்கிய நாட்டவரின் இச் செயல் முறைத் திட்டங்களே ஒற்றர் வங்து உரைக்கச் செவிமடுத்தான் கரசிம்மவர்மன். 'புலிகேசியின் முன்னேய படை யெடுப்பால் பல்லவநாட்டு மக்கள் பட்ட தொல்லே இன்னமும் தீர்ந்தபாடில்லை; அதை அடுத்து அரசன் இறந்த அவலம், அவரை மேலும் அலேக்கழித்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் புலிகேசி படையொடு புகுங்தால் பல்லவப் பேரரசு இல்லாதுபோவதல்லது கின்று நிலைபெறுவது இறப்பவும் இயலாதே! அந்தோ! பல்லோர் போற்றிக் காத்த இப்பல்லவ அரசு, என்ளுேடு மாண்டு மறைந்து விடுமே! அம்மாபெரும் பழி வந்து என்னைப் பற்றி விடாவாறு கற்றுணே புரிய வல்லார் ஒருவரும் இலரோ” என்று எண்ணி எண்ணி ஏங்கும் அம் மன்னன் மகன்பால், அமைச்சர்கள், பரஞ்சோதியாரின் பெருமை பேராண்மைகளை விளங்க உரைத்து, 'அவர் வந்தால் பல்லவ நாடு பகைவரைப் பாழ்செய்யும் பேராற்றல் பெற்று விடும். ஆகவே அவரை அழைக்க ஆவன புரிவாயாக’ என்று வேண்டினர். அறிவாற்றல் மிக்க அமைச்சர்கள் கூறியன கேட்ட அப்போதே, பல்லவப் பேரரசனின் வேண்டு கோள் ஏற்ற திருவோலே, பரஞ்சோதியாரைத் தேடிச் சென்றடைந்தது; அரசன் வேண்டுகோளை அறிந்தார். போரால் கெட்டழியப் போவது தொண்டை காடு; சோனட்டினராகிய தமக்கு அதனல் வரக்கூடிய கேடு - - . . . . . . (گسسازی