பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 எதுவும் இல்லை. ஆகவே வேண்டுகோளை ஏற்று வீணே போர்த்தொல்லைகளைத் தாங்க வேண்டுவதில்லை என்று எண்ணினர் அல்லர் பரஞ்சோதியார் தொண்டை காடு தமிழ் காட்டின் ஒருபகுதி. ஆகவே அங்காட்டின் அழிவு 5ம் நாட்டின் அழிவே என்று எண்ணினர்; மேலும் புலிகேசி மண்ணுசை பிடித்தலையும் பேய வைன்; இன்று தொண்டைநாட்டைக் கொண்டால் காளை காவேரி நாட்டில் காலூன்றவும் கருதுவன்; ஆகவே, அவனே வேங்கடத்திற்கு வடக்கிலேயே தடுத்து நிறுத்துதல் வேண்டும் என்றும் விரும்பினர். இவற்றிற் கெல்லாம் மேலாக படைத்தலேமையேற்க இன்று நம்மை அழைத்திருப்பவன் மனத்தெளிவு இன்மையால் தொடக்கத்தில் சமணசமயம் மேற் கொண்டிருந்தாலும் நாவரசர் நற்றுணேயால், யாம் விரும்பும் சைவ சமயச் சார்புடையணுகி, அது தழைக்க ஆவன பலவும் ஆர்வத்தோடு அமைத்த அரசர்பெருமானின் அருமந்த மகனவன்; ஆகவே அவனே அது கருதியாவது காப்பது தம் கடன் என்ற உணர்வு மிகவே காஞ்சி நோக்கிக் காற்றென விரைந்தார். - பல்லவப் படைத்தலைமையினை ஏற்றுக்கொண்ட பரஞ்சோதியார் தமிழகத்தின் மீது புலிகேசிமேற் கொண்ட முதற் படையெடுப்பின் போது இருதிறத் தவர்பாலும் இருந்த படை அளவு ஆற்றல்களேயும், அக்கால அரசியல் சூழ்கிலேகளையும், அப்போது மேற் கொண்ட போர்முறைகளையும் ஒன்றுவிடாது கேட்ட றிந்து அவற்றை இன்றைய சூழ்நிலைகளோடு ஒருங்கு நிறுத்தி ஒப்புநோக்கித் தம்போர்த் திட்டங்களே வகுத் துக்கொண்டு புலிகேசியின் வரவை எதிர்நோக்கிக் காஞ்சிக் கோட்டையில் காத்திருந்தார். - அங்கிலேயில் புலிகேசி தன் சாளுக்கியப் படை யோடு வாதாபியை விடுத்துப் புறப்பட்டு, துங்கபத்