பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வந்து எதிர்க்கவே சாளுக்கியன் செயல் இழந்து விட்டான். பரஞ்சோதியாரின் புதிய போர் முறைத் திட்டத்தால், சாளுக்கியப் பெரும் படை சிதறுண்டு போயிற்று. காஞ்சி நாட்டு அரியணை மீது ஆசை கொண்டு வந்த புலிகேசி, வாதாபி நோக்கி விரையத் தொடங்கினன். சூரமாரப் போர்க்களத்தில், வெற்றித் திருமகள், பரஞ்சோதியார்க்கு வாகைமாலேகுட்டி வாழ்த்துக் கூறினள். மகேந்திரன் பகைவன் படை தமிழகத்து மண்ணில் உலா வரவாவது இடங்கொடுத் தான்; ஆனால், பரஞ்சோதியார், பகைவர் தமிழகத்து மண்ணில் கால்வைக்கவும் இடங்கொடுத்தாரல்லர்: என்னே இவர்தம் பேராண்மை! என மக்கள் வியங்து பாராட்டலாயினர். . . . குரமாரப் போர்க்களத்தில் பெற்ற வெற்றி யொன்றே, பரஞ்சோதியாரின் போர்த்திறனைப் பாராட்டப் போதியதாகும். ஆனால், அவர் ஆற்றலும், ஆண்மையும், அவரை அவ்வெற்றியோடு அமைதி கொள்ளவிட்டில, மேலும், தோற்ருேடும் பகைவனே மேலும் துரத்துவது அறப்போர்முறைக்கு முரணும், பேராண்மைக்கு இழுக்காம் என்பது உண்மையே என்ருலும், புலிகேசி பேராசை பிடித்தவன்; முன்னம் ஒரு முறை தோல்வி கண்டும், தமிழகத்து ஆட்சி ஆசையைக் கைவிட்டானல்லன், அவ்வாசை அவன் உள்ளத்தில் இருக்கும் வரை அவன் படையெடுப்பு ஓயாது. ஆகவே அவ்வாசை அவன் உள்ளத்தைவிட்டு அறவே நீங்க வழி காணுதல் வேண்டும்; பல்லவ நாட்டவர் எத்துணைப்பெருவீரர்; அவர்மீது போர் தொடுப்பது எத்துணேப்பேதைமை என்பதை அவன் காட்டுமக்கள் கேரில் உணர்ந்தால் அல்லது அதற்கு வழி பிறக்காது; ஆகவே அவர்க்கு அவ்வுணர்வு ஊட்டு வான் வேண்டியாவது காஞ்சிப்படை, வாதாபியை வளைத்தழித்தல் வேண்டும் என்று விரும்பினர் பரஞ்சோதியார். படைத் தலைவர் வேட்கை அது: