பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 வாயின், அவ்வாறே செல்க என விடை கொடுத்தான் வேங்தன். உடனே வடகாடு நோக்கி விரைந்தது பல்லவப் பெரும்படை. இடைவழியில், மணிமங்கலம், பரியலம் எனும் இடங்களில் இருந்து இளைப்பாற எண்ணிய வாதாபிப் படையை வளைத்து அழித்துத் துரத்திய காஞ்சிப் படை, சாளுக்கிய எல்லேக்குள் புகுந்ததும், வழியிடை ஊர்களைப் பாழ்செய்து கொண்டே விரைந்து, வாதாபி ககருள் புகுந்து விட்டது. சாளுக்கியத்தலேங்கருக்குள் புகுத்த காஞ்சிப்படை தன்னேத் தடுப்பார் அற்ற கிலேயில், மாடமாளிகைகளே யெல்லாம் இடித்தும் எரியூட்டியும் மண்மேடாக்கிற்று; உண்ணுர்ேகிலே களிலும் உணவுதரு விளைபுலங்களிலும் களிறுகளையும், குதிரைகளையும், போக்கிப்பாழ் செய்தது. பொன்னே யும், நவமணிகளையும் போர்வீரர்கள் கொள்ளைகொண் டனர். பல்லவத் தலைநகரைப் பாழ்செய்து பேரின்பம் காணத் துடித்த சாளுக்கியர், தம்தலைநகர், தம்கண் முன்னரே பாழாவதுகண்டு, கண்ணிர் சொரிந்து கலங்குவது அவர் காலத்தோடு கின்று விடக்கூடாது; அது தொடர்ந்து நிகழ்தல் வேண்டும்; அவர்க்குப் பின் வரும் பற்பல தலைமுறையினரும் எண்ணி எண்ணி இரங்குதல் வேண்டும்; ஆகவே அன்றைய அழிவோடு, தம் வெற்றியையும் கினேவூட்டும் நினைவுச்சின்னம் ஒன்றை அவ்வூர் நடுவண் காட்டவிரும்பினர் பரஞ் சோதியார். அவ்வாறே அவ்வூர் நடுவண் அமைந்து கிடக்கும் தக்கிண ஈரப்பன் கோயிலுக்கு அணித்தாக வெற்றித்தாண் ஒன்றை வானளாவ நாட்டிவிட்டு, அவ்வெற்றிக் களிப்போடு காஞ்சி வந்தடைந்தார், பல்லவத் தளபதியார் பரஞ்சோதியார். வாதாபி வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன், வாதாபி கொண்டவன்" என வழங்கப் பெற்ருன்