பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கருணுகரன் கரிகாற் பெருவளத்தானின் ஆண்மை ஆற்றல் களால், கடல்கடந்த காட்டவரும் தன்புகழ் பாடிப் பணிக்தொழுகும் பேரரசு பொருந்தியதாகவும், அவன் அறிவாற்றல்களால் நீர்வளம் மிக்க கெற்களஞ்சியமா கவும், நவமணியும், நால்வகைப் பொன்னும் மலிந்த பெருவாணிக நிலையமாகவும் விளங்கிய சோழநாடு, கடைச்சங்க காலத்திற்குப் பிறகு, களப்பிரர் எனும் நாடோடிக் கொள்ளைக் கூட்டத்தவரால் அலேப்புண்டு அரசிழந்து இருண்டுவிட்டது. இடைக் காலத்தில் இடம் பெற்ற அவ் இடர்ப்பாட்டினேப் போக்கி அதன் பழம்பெருமையை கிலேகாட்டிய விஜயாலயன் வழி வங்த சோழர்குலப் பேரரசர்களுள் குலோத்துங்கனும் ஒருவனவன். * ... . சோழர் குலத் துக் குடி முறைக்கு உரியவனுகாது, கீழைச் சாளுக்கிய கோமனுக்குச் சோழர்குலக் கோமகள் வயிற்றில் வந்து பிறந்தவனாகவும், நாடாள் வார்க்கு வேண்டும் கால்வேறு கலங்களேயும் கணிமிக வுடைமையால், அரசிழந்து அல்லல் உற்ற சோனட்டு மக்களால் சோழர் குலக் கோமகனக விரும்பி வரவேற் கப்பட்டான் குலோத்துங்கன் எனவும், தன் அரசி ழந்து தம்மைச் சரண் அடைந்த கடாரத்து அரசனுக் குத் துணைபுரிவான் வேண்டிக் கடாரம் நோக்கிச் சோழர் விடுத்த கடற்படைக்குத் தன் இளங் கோப் பருவத்திலேயே தலைமை தாங்கிக் கடல் கடந்து சென்று வென்று, கருதிவந்ததை முடித்துத், தன்