பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 புகழைக் கடல்கடந்த காட்டவரும் கண்டு பாராட்டும் நெடுநிலை பெற்ருன் குலோத்துங்கன் எனவும், மக்கள் பாராட்டும் அவன் மங்காப் புகழ் பலவாம் என்ருலும் குலோத்துங்கன் கொற்றத்தைப் பைங்தமிழ் இலக் கியங்கள் உள்ளளவும் நாட்டவர் நினைவில் நிலைத்திருக் கப் பண்ணிய பெரு வெற்றி, அவன் வடகலிங்க காட் டில் பெற்ற வெற்றியேயாகும். அவ்வெற்றியை அவனுக்குத் தேடித் தங்தவனே 5ம் கருணுகரன். பல்லவப் பேரரசு அழிந்துபோன கிலேயில், அம் மரபில் வந்த அரசிளங் குமரர்கள். அக்காலேப் பேரர சாய் விளங்கிய சோழர் பேரரசில், அரசியல் நெறி யுணர்த்தும் அமைச்சர்களாகவும், க ள ம் பு கு ங் து வெற்றிதரும் படைத்தலைவர்களாகவும் பணிபுரிந்து வங்தார்கள். அவ்வாறு பணிபுரிந்து வந்தாருள் கருணு கரனும் ஒருவனவன். பல்லவர் குலத்தில் வங்தவ தைலின் கருணுகரத் தொண்டைமான் எனவும், சோழ காட்டில் உள்ளதான குலோத்துங்கச் சோழவள காட் டைச் சேர்ந்த திருகறையூர் நாட்டு வண்டை நகரை வாழிடமாக் கொண்டமையால் வண்டையர்கோ என வும் வழங்கப் பெறும் கருணுகரன், குலோத்துங்கன் படைத்தலேவகைப் பணிபுரிந்தகால, ஒருநாள், சோனட்டின் தலைமைசால் தலைநகரம் தஞ்சைமா நகரைவிடுத்து, தன் ஆணையே நிலவும் தொண்டை நாட்டின் தொன்மைசால் தலைநகராம் காஞ்சிமா நகர் புக்குச் சிலநாள் வாழக் கருதின்ை; அவ்வாறு ஆங்குச் சென்றிருந்தகால, அமைச்சர் ஆன்ருேர் உள்ளிட்டா ரோடு பேரத்தாணிக்கண் அமர்ந்து, குறைவேண்டியும் முறைவேண்டியும் வருவார் அனைவர்க்கும் காட்சி அளித்துக் களிப்பூட்டிய காவலன் குலோத்துங்கன் முன்னர், சோழர் ஆணைக்கு அடங்கிய பெருகில வேங் தர்களும், குறுகில மன்னர்களும், மண்டலத்துத் தலே வர்களும் ஒருவர்பின் ஒருவராக, வரிசை வரிசையாக