பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 இவ்வாறு இரு காடுகளிலும் பெரு வெற்றி கொண்ட கரலோக வீரன் பாண்டியரும் சேரரும், சோணுட்டின் கலைநகர்க்கு கணிமிகச் சேய்மைக்கண் உள்ள்மையால், பேரரசு அறியாவகையில் படைதிரட் டுவது இயலுகிறது. இனி அதற்கு இடங்தராதவாறு ஏற்பன செய்தல் வேண்டும் என்று எண்ணித் தமிழ கத்தின் தென்கோடி முனையிடை ஊராகிய கோட்டாறு முதலாம் பகைநாட்டுப் பேரூர்கள் ஒவ்வொன்றும் சோணுட்டின் நிலைப்படைகளை நிறுவிக் காக்க வழி வகுத்து வங்து சேர்ந்தான். நரகலோக வீரன் கண்ட இப்பல்வேறு வெற்றிகளையும் ஒரு சேரக் கூறிப் பாராட்டுகிறது. விக்கிரம சோழன் உலா. வேங்கையினும் கூடார் விழிளுத்தும், கொல்லத்தும் கொங்கத்தும் ஒடா இரட்டத்தும், ஒட்டத்தும், நாடாது அடி எடுத்து வெவ்வேறு அரசுஇரிய, வீரக் கொடி எடுத்து வெவ்வேறு அரசுஇரிய, வீரக் கொடி எடுத்த காலிங்கர் கோன்' சிறந்த வீரகைச் செயலாற்றிய நரலோக வீரன், சிவபரம் பொருளிடத்தில் சிறந்த பேரன்புடையவனும் ஆவன். அவ்வன்புடைமையால், தில்லையிலும், திரு வதிகையிலும் அவன் ஆற்றிய அறச் செயல்கள் அளப் பரியனவாம். தன் பெயர் தாங்கும் பெரிய திருச்சுற்று மாளிகை, நூற்றுக்கால் மண்டபம், தேவாரம் ஒதுவ தற்குரிய மண்டபம் முதலாயினவற்றைக் கட்டினன். தியாகவல்லி எனும் திருப்பெயர் பூண்ட சிற்றுார்கள் சிலவற்றைத் தேவதானமாக அளித்தான். மூவர் தேவாரத் திருப்பதிகங்கள் பொறித்த செப்பேடுகளேத் தில்லையில் சேமித்து வைத்தான். திருவிழாக் காலத் தில் தெருக்களில் தண்ணிர் தெளிக்கவும், விளக்கேற்ற வும், இளம் மகார்க்கு ஆவின்பால் அளிக்கவும் ஆவன புரிந்தான். - * - -