பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

அகற்றும் வினாநிலையிலும் போர் மறவர்களின் பழங்குடிப் பெருமை மிளிர்வது காண்க.

"பொய் அகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கு ஒலிநீர்-கை அகலக்
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே. வாளோடு
முன் தோன்றி மூத்தகுடி."

மறவர் குடிவந்த மாண்புமிகு அப்படைத் தலைவர்கள்,களம் புகுந்து போருடற்றும் நிலையில்,வெற்றி ஒன்றே குறிக்கோளாய் வெஞ்சமர் புரிவர் என்றாலும்,அவ்வெற்றியை எவ்வாறேனும் அடைந்து விடுதல் வேண்டும் என்று எண்ணி,அறப்போர் முறையை அறவே கைவிடுவாரல்லர். வெற்றியே குறிக்கோளாம் என்றாலும் அவ்வெற்றி விழுமிய முறையால் வரும் வெற்றியாதல் வேண்டும் என்பதிலும் விழிப்புணர்ச்சி உடையராவர். சிறந்த வீரன்,தன்னினும் ஆற்றல் மிக்கவனும், தனக்கு நிகரானவனுமான பிறிதொரு வீரனோடு, ஒத்தநிலையில் நின்று போராடி வெல்லவிரும்புவனே யல்லது, மறங்குன்றிய மாற்றானோடும் போரிடான்; மறமாசுப்பட்டானோடும் போரிடான். அதுமட்டுமன்று; பகைவன்,படைக்கலம் இழந்தோ,பாய்ந்தோடும் ஊர்தி இழந்தோ போரிடற்கியலாத் தளர்நிலையுற்றமை நோக்கிப்படை தொடுப்பதும் செய்யான்.

மதம் படுமளவு பெருவலிமிக்க வேழமே யென்றாலும் "வேழம் ஒரு விலங்கு; தன்னினும் அறிவுக் குறை பாடுடையது. அதை வெல்வது ஒரு வீரனுக்கு அழ காமோ?" எனக் கூறிப் பழிப்பர் ஆதவின், தன்மீது பாய்ந்துவந்த பரிமா மீதும் வேல் எறியாதவனும், போர்க்களம் பல புகுந்து போராடி வீரப்புண் பல பெற்ற வீறுடையார் வந்து எதிர்த்தக்கால் அவரெல்லாம் பலரோடு போராடிப் போராடிப்