பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சென்று வேலெறிந்தும் வெங்கணை விடுத்தும் அழிக்க. எண்ணுவது ஆண்மைக்கு இழுக்காம் என்ற உயர்ந்த குறிக்கோளை உடைமையாகப் பெற்றிருந்தார்கள் அக்காலப் படைத்தலைவர்கள். அம் மறவர் மாண்பினைப், புலவர் பெருமக்கள்,"அழியுநர் புறக் கொடை அயில்வேல் ஒச்சாக் கழிதறு கண்மை" எனப் பாராட்டிப் பாடிச் சென்றுள்ளனர்.தன் போர் வெறியால்,அம்மரபை மறந்து,யாரேனும் ஒரு வீரன், தோற்றோடிய மாற்றான்மீது அம்பெறிய,அதனால் அம்மாற்றான் முதுகில் புண்பெற்று விடுவனாயின், புறப்புண் பெறுவது பெரு வீரர்க்கு இழுக்காம் என்பதை உணர்ந்திருந்தும், அப் புறப்புண் பெற்ற னைக் காட்டிலும், அவன் புறத்தே புண் உண்டாக, படை தொட்ட வீரனையே பெரிதும் பழிப்பர்.

காவிரிக்குக் கரையும் அணையும் அமைத்தும்,காவிரிப் பூம்பட்டினமாம் கடற்றுறை நகரைக் கண்டும் திருமாவளவன் எனும் புகழ்மிகு பெயர் பெற்றோனாகிய கரிகாற் பெருவளத்தான்,சேரமான் பெருஞ்சேரலாதனோடு நிகழ்த்திய போரில், கரிகாலன் கணைபட்டு,சேரலாதன் முதுகில் புண் உண்டாகி விட்டது. புறப் புண் பெற்ற பெருஞ்சேரலாதன் அப்பழிக்கு நாணி,வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்து விட்டான். புறப்புண் பெற்றவனாகவும் அவன் அது பெற்றமைக்கு நாணி உயிர் இழக்கத் துணிந்து விட்டமையால்,அவன் சாலவும் சிறந்த வனாகி விட்டமை கண்டு அவனைப் பாராட்டிய பெரும் புலவர் பலரோடு தாமும் ஒருவராய்ப் பங்குகொண்ட வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவர், கரிகாலனை அணுகி, "வளவ! களம் புகுந்து,வாளேந்தி, வெஞ்சமர் புரிந்து, நின் பேராண்மைக்குத் தக்க.பெரிய வெற்றி பெற்ற உன்னைக் காட்டிலும்,நீ வெற்றி பெற்ற அவ்வெண்ணிப் பறந்தலைப் போரில்,