பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

பழந்தமிழகத்துப் போர்த்தளபதிகள்,பிறப்பு முதலாம் பல்வகை நிலையிலும் சாலச்சிறந்தவர் என்பதை நிலை நாட்ட,கூறிய இச்செய்திகளே போதும்.ஆனால், அத் தளபதிகளின் பண்பும் பெருமையும் அந்த அளவோடு அமைதியுறுவன அல்ல.சிறந்த குடியில் எல்லோருந்தான் பிறக்கிறார்கள்.பயிற்சி பெறப் பெறப் படைக்கலவன்மையில் சிறந்து விளங்குவது எல்லோருக்கும்தான் இயலும்.ஆனால்,ஒப்பாரும் மிக்காரும் இல்லா உரவோர் தமிழ்ப்படை முதலிகள் என்பதற்கு இப்பண்புகள் மட்டும் போதுவன அல்ல. பிறர்பால் காணலாகாப் புதுமையும் பெருமையும் அவர்பால் பொருந்தியிருத்தல் வேண்டும். என எண்ணினார்கள். அவர்கள் எண்ணம் பிழையா வாறு, பிறர்க்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பு அவர் பால் பொருந்தியிருந்தது என்பதற்குச் சான்று பகர்ந்து நிற்கிறார்கள் சில சான்றோர்கள். அத்தகைய சான்றோர்களுள் ஒருவராகிய மதுரை இளங்கண்ணிக் கோசிகனார் கூறுவது கேண்மின்.

செயற்கரிய செய்வார் என்றார் வள்ளுவப் பெருந்தகையார். களம்புகுந்து, கையில் எந்திய படைக்கலம் பாழ் படுமளவு கடும்போர் புரிந்து பகைவரை அழித்து வெற்றிகொள்வது போர்க்களம் புகும் வீரர் அனைவர்க்கும் இயலும் காரியமாம். இவ்வாறு எல்லோர்க்கும் இயலும் ஒன்றையே.தானும் பெற்றிருக்கும். இழிவுடை யானல்லன் எங்கள் படைத்தலைவன். அவன் ஓர் ஒப்பற்ற வீரனாவன்; அத்தகையான் பால், பிறர்பால் இல்லாப் பேராண்மை பொருந்தியிருத்தல் வேண்டும்.உண்மையில் அவனொரு பெருவீரனாயின் அவன் போர்க்களம் புகுவதோடு, பிறர்போல் படைக்கலம் ஏந்திப் போரிடுவதோ கூடாது. பாசறைக்கண் அவன் உள்ளான் என்ற செய்தி அறிந்தே பகைவர்கள் பணிந்து விடுதல் வேண்டும். பாம்பைப் பார்க்காது. அது வாழும்