பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

வீறுவீறு ஆயும் உழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
மூதிலாளர் உள்ளும், காதலின்
தனக்குமுகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
இவற்கு ஈக என்னும்."

வேந்தராவார், நல்ல படை முதலிகளைத் தேர்ந்து கொண்டால் மட்டும் போதாது. தன் வாழ்வும்,தன் நாட்டின் வாழ்வும், அத்தளபதிகளின் தளரா நற்றொண்டிலேயே உளவாம் ஆதலின்,வேந்தன் வாழ்வே தன் வாழ்வு,அவன் பொருட்டு உலையாது உழைப்பதே தன் கடன் என்ற உணர்வு அவர் உள்ளத்திம் ஊற் றெடுத்துப் பாய்ந்து கொண்டேயிருக்கும் வகையில்,அவர் உள்ளம் உவக்குமாறு உறுபொருள் அளித்தல் போலும் உதவிகளை அளித்தல் இன்றியமையததாகும்.

சோழன் நலங்கிள்ளியின் அரசவைக்கண் அமர்ந்து, அவனுக்கு அரியபல அறிவுரைகளை, அரசியல் முறைகளை அளித்துவந்த ஆன்றோராகிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார், "நலங்கிள்ளி! நின் வெற்றி மிகு வாழ்விற்கு வழிகோலியவர் நின் நாற்படை தலைவராவர். ஆகவே,அவர்களின் நல்வாழ்வில் நீ என்றும் காட்டம் உடையையாதால் வேண்டும். இவ்வறிவு நின் பால் இயல்பாகவே அமைந்து கிடைக்கிறது.என்றாலும்,அதன் இன்றியமையாமை உணர்ந்து யானும் வற்புறுத்து கின்றேன். நெல் விளைந்து கிடக்கும் கழனிகளில் வந்து படியும் பறவைகளை ஓட்டிக்காவல் புரிந்திருப்பார், தமக்குப் பசி நேர்ந்ததும் கால்லை கைவிட்டு வீடு சொல்லாதே, ஆங்கே அணித்தாக ஓடும் உப்பங்கழிகளில் உள்ள மீனைப்பிடித்து, பனங்கருக்குத் தீயில் தீய்த்து உண்டும், புதிய மதுவை உண்டும் பசி தீராராயின், தெங்கிளங்காய்களை வேண்டுமட்டும் உதிர்த்து வெட்டிப் பருகிப் பசியாறி மகிழ்தற்கு இடமான வளமான நாடுகளை நீ அவர்கள் உடைமையாக்க,