பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

யடைகளை, அவற்றின் வலிய பெரிய கைகளை வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்ட போரில் தன் படைவீரர் பலர் விழுப்புண் பெற்று விட்டனர் என்பதை அறிந் தான் வேந்தன். அறிந்த நேரமோ, இரவீன் இடையாமம், கொடிய வாடை வீசும் குளிர்காலம், மழைத் துளிகள் மாறாது வீழ்ந்துகொண்டு இருக்கும் மாரிக் காலம்.என்றாலும்,அரசன் காலத்தின் கொடுமையினை நினைந்தானல்லன்; புண்பட்டாரைக் கண்டு ஆறுதல் உரைத்து அன்புரை வழங்கி வரவேண்டும் என்பதில் உள்ள ஆர்வம்,காலத்தின் கொடுமையை மறக்கச் செய்தது.உடனே, வாடை வீசுவதால் தெற்கே சாய்ந்து எரியும் சுழல்களைக் கொண்ட பெரிய பாண்டில் விளக்குகளை ஏந்திப் பலர் முன்னே சென்றனர். வேப்பந்தார்க் கண்ணியும், வேற்படையும் உடைய படைத் தலைவன் வேந்தன் முன்னே சென்றான். மழை நீர் மன்னன் மீது விழாமை குறித்து, ஒருவன் வெண்குற்றக் குடையேந்தி வேந் தனைத் தொடர்ந்தான். காற்றால் அலைப்புண்டு கீழே புரண்டு புரண்டு சரியும் மேலாடையினை இடக்கையால் பற்றிக்கொண்டு, தோளிலிருந்து தொங்கும். வாள்மீது வலக்கை கிடக்க, வழியில் வரிசை வரிசையாக நிற்கும் குதிரைகள் தம் மேனியைச் சிலிர்க்க, அவற்றின் மீது வீழ்ந்திடும் மழைத்துளிகள் சிதறித் தன்மேல் விழ, காவலன் மழையால் சேறுபட்ட தெரு வழியே நடந்து சென்று, புண் பெற்ற வீரர்கள் குறித்தும், அவர் பெற்றிருக்கும் விழுப் புண்கள் நிலைகுறித்தும் படைத் தலைவன் விளக்கம் கூறிய வாறே முன்னே செல்ல, அவ்வீரர்கள் தம் உறுநோய் மறந்து உளம் மகிழவல்ல அன்புரைகளை வழங்கிக் கொண்டே சென்ற வேந்தன் விழுச் செயலை வாயாரப் யாராட்டியுள்ளார்.

"ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீன்திரள் தடக்கை நிலமிசைப் புரள