பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மேல் வந்த மாற்றார் படையைத் தன் ஆற்றலால் அழித்து ஒட்டிய ஆற்றல் மிகு மறவன் வருக! முற்ற வும் வளைந்த வில்லிலிருந்து புறப்பட்டு விரைந்து பாயும் அம்புகளைத் தாங்க வல்ல அகன்ற மார்பும், குதிரைகளைக் காற்றெனக் கடிது செலுத்தவும், பாயும் அப்பரிகளை வேண்டும்போது வேண்டும் இடத்தில் இழுத்து நிறுத்தவல்ல பருத்த உரம் மிக்க தோளும் உடைய வீரர் வருக! கல்லை இடித்து ஆக்கிய பகைவரின் கற்கோட்டை மதிலகத்தே இவர்ந்து ஆரமர் புரிந்த ஆண்மையாளர் வருக! செந்தீயெனச் சினம் மிக்கு வந்த பகைவர் படைநடுவன் முரசு முழங்கப் பாய்ந்து, அப்படையினைச் சேர்ந்த களிறுகள் கணக்கிலாதனவற்றை வெட்டிச் சாய்த்து விழுப்புண் பெற்ற வீரர்கள் வருக! நாற்புறமும் பகைவர். வளைத்துக் கொள்ள நடுவே அகப்பட்டு ஆற்றல் இழந்து கிடப்பார்க்குத் துணைபுரிவான் வேண்டி பகைவர் நாற்படையைப் பிளந்து கொண்டு பாய்ந்து, அந்நிலையில் அவர்கள் கூடி எய்த அம்பெலாம் ஏற்று ஆரக் கால் தைக்கப்பெற்ற குடம்போலும் காட்சி உடைய வனாகி கவின்மிகு மார்புடைய மாவீரன் வருக! மாலையும், மணம்மிகு சந்தனமும் உடையராய்க் களம் புகுந்து களிற்றுப்படை வென்ற கட்டிளங்காளையர் வருக! மற்றும் உள்ள மாவீரர் அனைவரும் வருக! வருக!! என அழைத்து அவர்க்கும், அவர் வழி வந்தார்க்கும் வேண்டும் விழுநிதிகள் வழங்கிச் சிறப்பிக்கும் சிறப்பினை மதுரைக் காஞ்சியின் மாண்புமிகு வரிகள் விளக்கி நிற்றல் காண்க!

"வருபுனல் கற்சிறை கடுப்ப இடையறுத்து
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
வாள்வலம் புணர்ந்த நின்தாள்வலம் வாழ்ந்த
வில்லைக் சுவைஇக் கணைதாங்கு மார்பின்
மாதாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின்!
கல்இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின்