பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

நல்எயில் உழந்த செல்வர்த் தம்மின்!
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கள் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத்து ஒழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்!
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண்டு எஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரியிணை அறிந்த நிறம்சிதை கவயத்து
வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன் குறட் டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்!
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியல்
பெருஞ்செய் ஆடவர்த் தம்மின்! பிறரும்
யாவரும் வருக! ஏனோரும் தம்மென
வரையா வாயில் செறாஅது இருந்து
பாணர் வருக! பாட்டியர் வருக!
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக! என
இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி,"

இவ்வாறு பண்மிகு தொல்குடிப் பிறப்புடை யராய்த் தோன்றிப் படைக்கலத் தலைமையேற்றுப் பணிபுரிந்து, அப்பணி மகிழ்ந்து வேந்தர்கள் வழங்கிய வளம் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த வீரர் சிலரின் வரலாற்றினைத் தனித்தனியே கண்டு செல்வோமாக!