பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.அதியன்

சேலம் மாவட்டம் தர்மபுரிக்குச் சங்கத் தமிழ் மக்கள் இட்டு வழங்கிய பெயர் தகடூர். தகடுரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிறு நிலப்பகுதியை அதியர் என்ற இனத்தவர் ஆண்டுவந்தனர். அதியர் இனம் யாதோ ஒருவகையில் சேர இனத்தோடு தொடர்புடையதாகும். தலைசிறந்த வள்ளலும் வீரனுமாய் விளங்கிய அதியமான் நெடுமான் அஞ்சியையும், அவன் மகன் பொகுட்டெழினியையும் பெற்றளித்த, பெருமையுடையது அவ்வதியர்குடி. ஆற்றலும் அருளும் மிக்க அரசர் பெருமக்களே ஈன்ற அக்குடி, அறிவுக் கருவூலமாய புலவர் ஒருவரையும் பெற்றுளது. பண்டைத் தமிழ்ப் புலவர் வரிசையுள். அதியன் விண்ணத்தனர் என்ற பெருந்தகையாரும் இடம் பெற்றிருப்பது காண்க. பாணரையும், பொருநரையும், கூத்தரையும் பேணுவதைக் குடிப் பெருமையாகக் கொண்டு விளங்கிய காரணத்தால்,அதியர் குடி, அவ்விரவலர் களின் வாழ்க்கை முறைகளே விளங்க அறிந்திருந்ததற்கு ஏற்ப,அக்குடியில் பிறந்தவராகிய அதியன் விண்ணத்தருைம், அவ்வாழ்க்கை முறைகளேத் தம் பாட்டிலும் வைத்துப் பாராட்டி யுள்ளார்.

அறிவு ஆற்றல் அருள் என்ற இம்மூன்றையும் முற்றப் பெற்ற அம் முதுபெரும் குடியில் பிறந்து, குடிப்பெருமை குன்றாதபடி வாழ்ந்தமையால் இயற்பெயர் மறைந்து போகக் குடிப்பெயரால் அதியன் எனப் பெயர் பெற்ற பெரியோன் ஒருவன் வாழ்ந் திருந்தான். கொற்றத்திலும் கொடையிலும் சிறங் திருந்த அக்குறுகில மனனன், வேங்கைப் புலிகள்