பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

இரும்பொறையையும், அவன் கொங்குப் படையையும் எதிர்த்தான். அதியன் தன் ஆற்றல் அனைத்தையும் காட்டிப் போரிட்டமையால், போர் தொடங்கிய சிறிது பொழுதிற்கெல்லாம் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டான். பாண்டியன், பகையரசர்களின் குடை, கொடி, முரசுகளையே கைப்பற்றிவரப் பணித்தான். ஆனால் அதியனோ, அப்பகை யரசர்களுள் பெரியவனும், அப்படையெடுப்பிற்கே காரணமானவ னுமாகிய சேரனையே கட்டிப் பிடித்துக்கொண்டு வந்து காவலன்முன் நிறுத்தினான்.

தங்கள் அரசன் பாண்டியன் கைப்பட்டான் என்பதை அறிந்ததும் கொங்குப் படை புறங்காட்டி ஓடத் தலைப்பட்டது. சேரனைச் சிறைப்பிடித்த அதியன், அப்படை யோட்டத்தைக் கண்ணுற்றான். உடனே, தன் படை கொண்டு அதைத் துரத்தினான். புகுந்த பாண்டிநாட்டு எல்லையையும் கடந்து, சேரநாட்டைச் சேர்ந்துவிட்ட பிறகும் அதியன், அப்படையைத் துரத்துவதை விட்டானல்லன். சேரநாட்டின் பெரும்பகுதி, தன் படையின் ஆணைக் கீழ் வரும்வரை அவரைத் துரத்திச்சென்று வென்று மீண்டான்.

தலையாலங்கானப் போரில், பாண்டியன் நெடுஞ்செழியன் பெற்ற வெற்றி பெரியதொரு வெற்றியே என்றாலும், அப்போரில் சேரனைச் சிறைசெய்து, அவன் கொங்குப் படையை வென்று ஓட்டி, அந்நாட்டில், பாண்டிய நாட்டின் ஆட்சியை நிலைநாட்டி அதியன் பெற்ற வெற்றியே, பலராலும் பாராட்டத்தக்க பெருவெற்றியாகும்.

தலையாலங்கானப் போரில் தலையாய வெற்றியை அளித்த அதியனுக்குப் பாண்டியன் பெருஞ் சிறப்பளித்தான்.அவன் வென்று அளித்த சேரநாட்டுப் பகுதியை அவன் ஆட்சிக்கீழ் ஒப்படைத்தான், அதியனும், அது ஏற்றுக்கொண்டு, தன் மலைநாடு