பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.குதிரைமலைப் பிட்டன்

சேரநாட்டில் குதிரைமலை என்ற பெயர்பூண்ட ஒரு மலே உளது. புலவர்களால் "ஊராக்குதிரை” எனப் பாராட்டப்பெறும் அம்மலே, மழை மேகங்கள் வந்து தவழுமளவு மிகமிக உயர்ந்த முடிகளேயும், அகன்ற பாறைகளுக்கிடையே ஆழ்ந்த பெரிய சுனே களேயும், அச்சுனேகளில் மலரும் கரு நீல மலர்களின் நறுமணத்தையும் கிறையக் கொண்டது. அக்குதிரை மலையிலிருந்து, ஓவெனும் பேரொலி எக்காலமும் எழுமாறு எண்ணிலா அருவிகள் விழுங்து உருண்டோடிக் கொண்டேயிருக்கும். அருவிகளின் இருக்ரைகளிலும் அடங்த மூங்கிற் புதர்கள் அழகுற வளர்ந்திருக்கும். மலர்ச்சாரல் மரங்களில் ஏறிப்படர்ந்திருக்கும் மிளகுக் கொடிகள் அளிக்கும் பயன் வாப்விட்டுக் கூறும் அள வுடையதன்று. மலேச்சாரலே அடுத்திருக்கும் விளைநிலங்களில் காங்தட் செடிகள், கன்னி மகளிரின் கைவனப்பைக் காட்டி மலர்த்திருக்கும். காட்டும். பன்றிகள், இராக்காலங்களில், தம் இனத்தோடு கூட்டங் கூட்டமாய் வந்து காந்தட் கிழங்குகளே உண்ண மண்ணே கீழ்மேலாகக் கிளறி விட்டுச்செல்லும். நிலம், அதனலேயே உழுத புழுதி போல் ஆகிவிடுவதால், அம்மலேச்சாரல் வாழ் குறவர் மக்கள், அங்கிலங்களே மறுவலும் ஏர்கொண்டு உழுவதில்லை. விதைப்பதற் கேற்ற கன்னுள் வரும்வரை காத்திருந்து தினை விதைத்திடுவர். தினேவளர்ந்து வளமான கதிர்களை ஈன்றதும் அவற்றைக் கொய்துவந்து, குற்றி அரிசியாக்கி, காட்டுப்பசு கறங்தளித்த, துரை தெளியாப் பாலே, அதுகாறும் மான் இறைச்சியே உண்டு வந்தமையால் அவ்விறைச்சி வேகவைத்த பானையில் வார்த்து, தினை