பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

நெடுமானஞ்சி, யாதோ ஒரு வகையில் சேர இனத்தவ ரோடு உறவுடையனாய்க் காணப்பட்டான். அதனால், அவன் உரிமை பாராட்டும் குதிரைமலையை ஆண்டி ருந்த பிட்டனையும் அச்சேர இனத்தோடு உறவுடைய னாய்க் கொள்வது பொருந்தும். இவன் அச்சேரர் படைத் தலைவனாய்ப் பணிபுரிந்தது அதை உறுதி செய்வதாகவும் உளது.

பிட்டங்கொற்றன் உரம்மிக்க உடலமைப் யுடையவனாவன். கொல்லன் உலைக்களத்தில், இரும் பைச் சிவக்கக் காய்ச்சி வைத்துச் சம்மட்டி கொண்டு எவ்வளவு விசையாக அடிப்பினும், எவ்வளவு முறை அடிப்பினும் அவ்வடிகளை யெல்லாம் ஏற்றும் சற்றும் நிலைகலங்காது கிடக்கும் உலைக்கல் போன்றது அவன் உடல்.பகைவர் எவ்வளவுபேர், எத்தனை வகையான படைக்கலங்களைக் கொண்டு எத்தனை முறை தாக்கினா லும் அவன் உடல் நிலைகுலையாது. அவர் ஏவும் படைக்கலங்கள் அவன் உடல்மீது பட்டதும் தாம் பாழூறுமே யல்லாது அவன் உடலைச் சிறிதும் ஊறு செய்யர் து. கோசர் என்ற கொற்றம் மிக்க குடியில் வந்தவர் வேல் எறிவதில் சிறந்தவர் என்ப. அவர்கள் தம் போர்ப் பயிற்சியை மறவாமல் இருத்தற் பொருட்டு, போர் ஒழிந்த காலங்களிலும், அப்பயிற்சியை இடைவிடாது மேற்கொண்டிருப்பர். அதற்காக ஊர்ப்புறத்தில்,முருக்கமரத்தால் இலக்கு ஒன்று ஆக்கி நாட்டிவிட்டு, எட்டி நின்று, வேல்களை அதன்மீது எறிந்து எறிந்து பயிற்சி பெறுவர். வேற்படைகளை அவர்கள் எவ்வளவு விரைவாக எறியினும், எத்தனை பேர் எறியினும், எத்தனை முறை எறியீனும் இலக்கு அழிந்துபோகாது. அத்துணை உறுதிவாய்ந்தது அது. பிட்டங் கொற்றன் உடலும் அத்துணை உரமும் உறுதியும் வாய்ந்தது. பகைவர் பலர் ஒன்று திரண்டு வந்து ஏவும் படைக் கலங்கள் எண்ணிலாத வந்து