பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

படாதே. இப்பெருவாழ்வுக்கு வழியேது என்ற விழிப்பு உனக்கு வேண்டாம். நாம் எதுவும் செய்ய- வேண்டியதில்லை. "வாரிக்கொடுக்கிறானே வள்ளல் பிட்டன், அவன் வெற்றிக்கு வழி வகுக்கும் அவன் வேல் வாழ்க! வெல்க! அவ்வேல் தரும் வெற்றி கண்டு, அவன் விரும்பும் விழுநிதிக்கு அவனை உரியவனாக்கு கிறானே அச்சேர வேந்தன், அவன் வாழ்க! பிட்டன் வேலுக்கு வாய்ப்பளிக்க அவ்வப்போது அவனைப் பகைத்து எழுகிறார்களே அவன் பகைவர்கள், அவர்கள் வாழ்க! என்று, வாழ்க! வாழ்க! என வாழ்த்துக் கூறுவது ஒன்றை மட்டும் ஒழுங்காகச் செய்தால், அது ஒன்றே போதும். எல்லாம் வந்து வாய்க்கும்.எவ்விதக் கவலையும் தீர்ந்து விடும்" என்று கூறிக் களிப்பதாகப் பாடிய வடமவண்ணக்கன் தாமோதரனார் பாட்டு, பிட்டன் பெருவளப் பெருமையைப் பார் அறியப் பறைசாற்றுவது அறிக.

"ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!
கள்ளும் குறைபடல் ஓம்புக! ஒள் இழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக!
அன்னவை பிறவும் செய்க! என்னதூஉம்
பரியல் வேண்டா......
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆர்அமர் கடக்கும் வேலும். அவன்இறை
மாவள் ஈகைக் கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே."

பிட்டங்கொற்றன் இவ்வாறு பெருவள்ளலாய் வாழ்வதையும், அவனால் இரவலர்கள் வறுமைகாணாப் பெருவாழ்வு வாழ்வதையும் கண்டார், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர். பிட்டன் வாரி வழங்கும் பொருள் எல்லாம், அவன் வேந்தன், அவனுக்கு விரும்பி அளிப்பதால் வந்தது என்பதை அறிந்தார்.அதனால், அவ்வேந்தன் மனம்