பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஒன்றும் குறையாமல் கொடுக்கவேண்டும்" என்று வேண்டினால், அவ்வாறே வழங்கி வழி கொடுப்பன். பாடிய புலவன், 'பிட்டங் கொற்ற! உன் பட்டத்து யானைக்குப் பொன் அணியெல்லாம் பூட்டிப் பரிசாகத் தருக" என்று கேட்டால் உடனே கட்டுத்தறியில் நிற்கும் களிற்றை அவர் விரும்பியவாறே அவர்பின் போக்குவன். ஒருவர்க்கு மட்டுமே இவ்வாறு வழங்குவன் என்பது இல்லை. வருவார் அனைவர்க்குமே அவ்வாறு வழங்குவன். பிட்டங்கொற்றனுக்குப் பாணன் பாட்டிலும், அவனுடன் வரும் விறலியர் ஆட்டத்திலும் விருப்பம் மிகுதி. ஆடி மகிழ்ச்சியூட்டும் விறலியர்க்கு, ஆண் யானைகளுள் ஆண்டு முதிர்ந்த யானையின் கோட்டில் பிறக்கும் ஒளிகிறந்த முத்துக்களால் ஆன மாலை சூட்டி மகிழவிப்பான். பாடி மகிழ்ச்சியூட்டும் பாணனுக்கு அவன் விருப்பும் மதுவை, அவன் மனம் வெறுக்குமளவு வார்த்து மகிழ்விப்பான். பாணனுக்கும் பாடினிக்கும். அத்துணை எளியனாகும் பிட்டன் கொடை பெருமைதான் என்னே!

பிட்டங் கொற்றன் இவ்வளவு பெரிய வள்ளலாய் வாழ்ந்தமையால், அவன் காலத்தில் வாழ்ந்திருந்த, பாடிப் பிழைக்கும் இரவலர்கள் எவ்விதக் கவலையும் இல்லாமல் இருந்தார்கள். உயிர்வாழ உடல்வருந்த உழைக்கவேண்டும். நாளைக்கு வேண்டும் ஆதலின், இன்று கிடைத்ததில் சிறிது சேர்த்து வைக்கவேண்டும் என்பன போலும் எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை. பீட்டன்பால் பரிசில் பெற்ற ஒருவன், தன் மனைவிபால், "இனிமையாகப் பாடவல்ல என்னருமைக் காதலி! இனி உனக்குக் கவலை வேண்டாம். அடுப்பில் உலையை ஏற்று. அறுசுவை உணவை ஆக்கி முடி. மதுவை மனம் விரும்பும் அளவு குடித்து மகிழ். அதில் குறைவைக்காதே. உயர்ந்த அணிகள் வேண்டுமா? அணிந்து கொள். மலர்மாலை சூடி மகிழ வேண் டுமா? அவ்வாறே சூடிக்கொள். சிறிதும் கவலைப்