பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.கோடைப் பொருநன்

பாண்டி மண்டலத்தில், பழனிமலைத் தொடரைச் சேர்ந்த ஒரு மலைத் தொகுதிக்கு கோடைக்கானல் என்பது பெயர். கோடைப் பருவத்தின் கொடிய வெம் மையைத் தாங்க மாட்டாத தமிழ் நாட்டுச் செல்வர்கள், தண்மையை நாடிச் சென்று தங்கும் இடங்களுள் இக்கோடைக்கானல் மலையும் ஒன்று கோடைக்கானல் என் இன்று அழைக்கப்பெறும் அம்மலை,பண்டு கோடைமலை எனும் பெயர் பூண்டிருந்தது. கோடைப் பொருப்பு எனவும் வழங்கப் பெற்றுள்ளது.

கோடை மலையின் அடிவாரத்தில் கடியம் என்ற பெயருடைய நகரம் ஒன்று இருந்தது. தொல்காப்பிய உரையாசிரியருள் ஒருவராகிய பேராசிரியராலும்,யாப் பருங்கல விருத்தி உரையாசிரியாராலும் தத்தம் உரைகளில் மேற்கோளாக எடுத்துக் காட்டத்தக்க செய்யுள் இலக்கண நூல் ஒன்றை ஆக்கியளித்த, கடிய நன்னியார் என்ற புலவரின் பிறப்பிடமாய்ப் பிற்காலத்தே விளங்கிய அப்பேரூரில், வில்வீரன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் இயற்பெயர் பண்ணி. பண்ணி கோடைமலையின் காவலனாய் வாழ்ந்தமையால், அவன், கோடைப் பொருநன் எனவும் பெயர் பெற்றிருந்தான். பண்ணி வேட்டை ஆடுவதில் வல்லவன். அவன் இடக்கையில் உரம் மிக்க வில்லும், வலக்கையில் கூரிய அம்புகளும் எந்நாழிகையும் காட்சிதரும். தம்மைப் பிடிக்க, காட்டில் ஆங்காங்கே அமைத்திருக்கும் சிறியவும் பெரியவுமாகிய புழைகளையும் கெடுத்து விட்டு விரைந்தோடி மறையும் மான்களையும் துரத்திப்