பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

வந்து பாராட்டினேன். ஆனால் நீயோ என்னை வரவேற்யதோ நான் விரும்பி வந்ததை வழங்குவதோ செய்யாமல், உன் கடமையிலேயே கருத்தாய் உள்ளாய். முழக்கியும் மின்னியும் சென்று, கால் இறங்கிக் கடலில் படிந்த கார்மேகம், அக்கடல் நீரை முகந்து கொள்ளாது மீளாதுபோல், ஆடியும் பாடியும் வள்ளல் களை அடையும் இரவலர்களும், அவ்வள்ளல்கள் யால் பெரும் பொருள் பெறாது வறிதே மீண்டது இவ்வையகத்தில் கண்டதில்லை. ஆனால், அதை நான் இன்று கண்டேன். உன்னைப் பாடிய நான் வறிதே மீள்கின்றேன். அது குறித்து நான் வருந்தேன். ஆனால், அதனால் பாடிப் பாராட்டிய புலவனைப் பசிநோயோடு போக்கிய பழிமிகு செயலால் உனக்கு யாதேனும் கேடுவந்துறுமோ என்றே கலங்குகிறேன். அவ்வாறு நோய் ஏதும் பெறாமல் நீ நீடுவாழுமாறு நின்னை வாழ்த்தி விடைபெற்றுக் கொள்கிறேன் எனப் புலம்பிவிட்டார். புலவர் பழிக்குமளவு கொடைத்தொழிலை மறக்கப் பண்ணிய பண்ணியின் கடமை யுணர்ச்சிதான் என்னே!

புலவரின் புலம்பல் பண்ணியின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. போர் யானைக்கு மொழி யுணர்த்தும் பயிற்சியைக் கைவிட்டு, புலவரை வரவேற்று அவர் விரும்பும் பெரும் பொருள் அளித்துப் பெருமை செய்தான். பொருள் பெற்ற புலவரும் அவன் கொடைப் புகழை அகத்திலும், படைப் பெருமையைப் புறத்திலும் வைத்துப் பாராட்டிப் புகழ்ந்தார்.

"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்.
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி."