பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

வழங்கிய வள்ளியோன் மக்கள். இவ்வியல்பால் இம் மக்கள் இருவரும் நினக்கு உறவுடையரே யல்லது பகையுடையாரல்லர். மேலும், உன்னைப் பகைத்துப் போரிடும் பருவம் உடையவரும் அல்லர். பெற்றோர் முகம் அல்லது பிறர் முகம் பார்த்தறியாப் பச்சிளங் குழவிகள். கொலைக்களத்தில் கொண்டுவிடப் பட்டுள் ளோம் என்பதை அறிந்துகொள்ளமாட்டா அத்துணை இளையர். இவர்களைக் கொல்வதால் உனக்கும் உன் குடிக்கும் பழியன்றி, புகழ் உண்டாகாது. ஆகவே, இவரைக் கொல்வது அறமோ, அறிவுடைமையோ ஆகாது" என்று அறிவுரை கூறி அவர்களைக் காப்பாற்றி, அவர் ஊருக்கு அனுப்பிவைத்தார்.

"நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி
தமது படுத்து உண்ணும் தண்நிழல் வாழ்நர்.
களிறு கண்டு அழூஉம், அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர். மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ உடையர்.
கேட்டனையாயின் நீ வேட்டது செய்ம்மே."

கோவூர் கிழாரால் உயிர் பிழைத்த அக்குழவிகள் இரண்டும் முள்ளூர் மலையரண் அடைந்து வளாலாயினர். அரசர்க்குரிய அறநூல்கள், அரசியல் நூல்கள் ஆகிய அனைத்தையும் ஐயம் அறக்கற்றுத் தேர்ந்தனர். அக்காலப் படைக்கலங்களாகிய வாள், வில் ஆகிய வற்றில் அரிய பயிற்சி பெற்றனர். சுருங்கச் சொன்னால், அன்று நாடாண்டிருந்த அரசிளங்குமரர்கள் அவ்வளவு பேரும் கண்டு பொறாமை கொள்ளத்தக்க கட்டிளங்காளையராய்த் திகழ்ந்தனர். நிற்க.

பறம்பு என்ற மலையணைப் பாரி என்பான் ஆண்டு வந்தான். அவன் கொடைப்புகழ் தமிழ்