பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூண்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்,
ஈண்டுச் செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனள் ஆதலின்,
ஆறுசெல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே நிரைத்தார் அண்ணல்!
கல் கண்பொடியக் கானம் வெம்ப,
மல்குநீர் வரைப்பன் கயம்பல உணங்கக்
கோடை நீடிய பைது அறுகாலை
இருநிலம் கெளிய ஈண்டி
உரும் உரறுகருவிய மழை பொழிந்தாங்கே."

அரியணை ஏறிய இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும், தன்னையும் காத்துத், தனக்கு அரசுரீமை யும் அளித்த திருக்கண்ணனுக்குச் சோழிய ஏனாதி என்ற பட்டத்தையும், ஏனாதி மோதிரத்தையும் அளித்துச் சோணாட்டுப் படைத் தலைவனாக்கிப் பெருமை செய்தான்.

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைச் சோணாட்டு அரியணையில் அமர்த்திய பின்னரும், சோழிய ஏனாதி திருக்கண்ணன் உள்ளம் அமைதி யுற்றிலது. உள்நாட்டுக் குழப்பம் ஒருவாறு அடங்கி விட்டது என்றாலும், சோழன் இளமைப் பருவத்தைப் பயன்கொண்டு, அவன் அரசைக்கைப்பற்றச் சோழர் குலப் பகைவர்களாகிய சேரனும் பாண்டியனும் முன் வருதலும் கூடும் என்ற நினைப்பால், அவனுக்குத் துணையாகச், சோணாட்டுத் தலைநகரில் மேலும் சில நாள் தங்கியிருந்து, அந்நாட்டையும் நகரையும் அரண் மிக்கதாக்கி விட்டுத், தன் முள்ளூர் மலைக்கு வந்து சேர்ந்தான் திருக்கண்ணன்.

ஆனால், அவன் ஊர் திரும்பிய சின்னாட்களுக்கெல்லாம் அவன் எதிர்பார்த்தது நிகழ்ந்துவிட்டது. சேர