பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

நாட்டில் யாணைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறை என்பவன் அரசாண்டு கொண்டிருந்தான்.பேரரசர்களையும் எதிர்த்துப் போரிட்டழிக்கவல்ல பேராண்மையும், பெரும்படையும் உடையான் அவன். மேலும், ஆட்சி நலத்தால் நாட்டு மக்களின் நன் மதிப்பையும் பெற்றிருந்தான்,அவன். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை வென்று சோணாட்டு ஆட்சியைக் கைப்பற்றக் கருத்தினான். கருதிய ஒன்றைக் காலம் தாழ்க்காது செய்து முடிக்கவல்ல அவன் படை சோணாட்டுள் புகுந்து போரிடலாயிற்று.

சேரன் படைபுகுந்த செய்தி கேட்டுக் கலங்கினான் கிள்ளி. ஆயினும், திருக்கண்ணன் தொடர்பால் அவனும், அவன் படையும் போர்ப் பயிற்சியில் தேர்ச்சி யுற்றிருந்தமையால் அஞ்சி அடங்கிவிடாமல், அப் படையெடுப்புச் செய்தியை முள்ளூர்மலை மன்னனுக்கு அறிவிக்கும் ஒற்றனைப் போக்கி விட்டுப் பாய்ந்துவரும் பகைவர் படையைத் தடுத்து நிறுத்திப் போரிட்டுக் கொண்டிருந்தான். ஆயினும்,களம் பல கண்டவனும், ஆண்டு முதிர்ச்சியால் போர் முறைகளைப் பெருக அறிந்தவனும் ஆகிய இரும்பொறையை வென்று ஓட்டுவது இராசசூயம் வேட்டோனால் இயலவில்லை. சோணாட்டு மண்ணைச் சேரநாட்டுப் படைகள் சிறுகச் சிறுகப் பற்றிக் கொள்ளச், சோழன் பின்வாங்க வேண் டியதாயிற்று. ஆயினும் திருக்கண்ணன் விரைந்து வந்து வெற்றி வாங்கித் தருவன் என்ற தளரா நம்பிக் கையால், தற்காப்புப் போரினை ஒருவாறு மேற்கொண்டிருந்தான்.

சேரர் படை சோணாட்டுத் தலைநகரை அணுகிவிட்டது. ஓரிருநாட்களில், சேரன் வெற்றிவிழாக் கொண்டாடி விடுவன் என்று எண்ணும் நிலை வந்துவிட்டது. அந்நிலையில், தன்படையோடு விரைந்து வந்து சேர்ந்தான் திருக்கண்ணன். போரின் முடிவே மாறிவிட்டது. புறங்காட்டிய சோழர்படை புகுந்து தாக்கத்