பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

முறை அறியாமையாலோ அன்று. ஆகூழ் இன்மையாலேயே தோற்றேன். அதுமட்டும் இருந்திருந்தால்,பெரும்புலவர் கபிலர் உயிரோடிருந்திருப்பர்.அவர் உயிரோடிருந் திருந்தால் இப்போரின் முடிவே வேறாகியிருக்கும். அவர் இத்திருக்கண்ணனின் தந்தையார் காரியின் நண்பராவர். இத்திருக்கண்ணனுக்குத் திருமணம் செய்து வைத்தவருமாவர்.காரி, என் முன்னோனாகிய தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர்ப் போரில் அதியமான் நெடுமான் அஞ்சியை வெல்லத் துணைபுரிந்து, சேர நாட்டிற்கு வெற்றி தேடித் தந்த செம்மலாவன். காரிக்கும் என் குடி முதல்வர்க்கும் இருந்த அந்நட்புறவை எடுத்துக் காட்டித், திருகண்ணனை எனக்கும் படைத்துணை அளிக்கும்படிக் கபிலர் கூறியிருந்தால், திருக்கண்ணன் மறுத்திருக்கமாட் டான். அவன் படைத்துணை எனக்கே கிடைத்திருக்கும். வெற்றி எனக்கே வாய்ந் திருக்கும்.ஆனால் அந்தோ! கபிலர்தாம் மறைந்துவிட்டாரே.அவர் இருந்திருந்தால் எத்தனை நன்றாம்!" என்றெல்லாம் எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருந்தான்.

மாந்தரஞ்சேரல் இரும்பொறை அவ்வாறு மனம் நொந்து கொண்டிருக்குங்கால், அவன் நண்பர் சிலர் அவனை அணுகி, அவன் மனநிலையை அறியாது, "மன்ன! மலை நிகர் யானைகளைக் கொண்ட பெரும்படை பாழ்பட்டுப் போக பேராற்றல் வாய்ந்த நீ, இறுதியில் இளையோனாகிய இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்குப் புறங்காட்ட நேர்ந்ததே! என்னே இக் கொடுமை!" என்று கூறி வருந்தினார்கள். அவர்க்கு, "நண்பர்காள்! வெற்றி நமக்கே வாய்த்திருக்கும். அதுவும் எளிதில் வாய்த்திருக்கும். ஆனால், அது நம்மை அணுகிக் கொண்டிருக்கும் அந்நிலையில் வந்து விட்டான் திருக்கண்ணன். காலில் வீரக்கழல் ஒலிக்க, காற்றென விரைந்து கடல்போல் பரந்த தன் படை