பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6.திருக்கிள்ளி


{{center|சோழர் குலத்தில் வந்தவர்கள், கிள்ளி வளவன், செம்பியன், சென்னி எனப் பல பெயரிட்டு அழைக்கப் பெறுவர். அப்பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் குறித்து வந்தனவே. அவை, சோழர் குலத்து முதல்வர்கள் ஆற்றிய அரும்பெரும் நிகழ்ச்சிகளைக் குறித்து நிற்கும். "சோழவள நாடு சோறுடைத்து" எனப் பாராட்டப் பெறும் பெருமையுடையது சோணாடு. தென்னாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை என்ற சிறப்பினை அந்நாடு இன்றும் இழக்காமல் பெற்றிருப்பதற்கு அந்நாடாண்ட சோழ அரசர்கள் அன்று ஆற்றிய அருந்தொண்டுகளே காரணமாம். அவர்கள், காடுகளை அழித்து நாடு கண்டதோடு, அந்நாட்டை வளமாக்குவதிலும் கருத்தைச் செலுத்தினார் கள். காவிரிக்கு அணையும் கரையும் அமைத்துக் காவிரி நீரைப் பயன் கொண்டார்கள். ஆற்று நீர் கிடைக்காத இடங்களில் பெரிய பெரிய நீர்நிலைகளைத் தோண்டி, நீரைத் தேக்கி வளங்கண்டார்கள். அப்பெருமையைத் "குளம் கொட்டு வளம் பெருக்கி" எனப் பாவிடை வைத்துப் பாராட்டியதோடு, அவ்வரசர்களின் பெய ரிடை வைத்துப் பாராட்டவும் விரும்பினார்கள், பழந்தமிழ் மக்கள். அவர் விருப்பத்தின் விளைவுகளில் ஒன்றாகவே, அவ்வரசர்கள் கிள்ளி என அழைக்கப் பெற்றார்கள். கிள்ளி என்ற சொல், தோண்டுதல் எனப் பொருள்படும் கிள் என்ற மூலத்திலிருந்து பிறந்த தாகும். ஆகவே, கிள்ளி என அழைக்கப் பெறுவார்,