பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

காட்சி அளித்தன. அவ்வடுக்கள், அவன் உடல் வனப்பைக் கெடுத்துவிட்டன் காண நாணும் கொடுமையுடையதாகி விட்டது அவன் வடிவம். ஆனால், அவன் வெற்றிப் புகழோ பாரெல்லாம் சென்று பரவிற்று. பைந்தமிழ் நாட்டு மக்கள் அனை வரும் அவனைப் புகழ்ந்து பாராட்டினார்கள். அவன் புகழைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

வாள்வடுப் பெறும் விழுமிய சிறப்பினும் சிறந்த பிறிதொரு போர்ப் பண்பு திருக்கிள்ளிபால் பொருந்தி யிருந்தது. "பேராண்மை' என்பதறுகண் ; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று அதன் எஃகு" என்றார் வள்ளுவர். படைக்கலம் இழந்து நிற்பவர், புறமுதுகு காட்டி ஓடுவோர் ஆகிய இவர்கள்மீது படைக்கலம் ஏவுவது போர் அறம் ஆகாது என்ற உணர்வுடையான் திருக்கிள்ளி. பகைவரை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், அவன் அவ்வுணர்வை மறந்துவிட மாட்டான். தோற்றோடும் பகைவரைத் துரத்திச் சென்று தொலைக்கத் துணியாது அவன் உள்ளம். திருக்கிள்ளியின் இந்நல் உள்ளத்தை அவன் பகைவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் கிள்ளி, வாள் எடுத்துக் களம் புகுந்தான் என்பதனைக் கண்டுகொண்டதும் புறமுதுகு காட்டி விடுவர். வீரர்கள், தம் மார்பில் புண் பெறுவதைக் காட்டிலும், பகைவர் முதுகில் புண் உண்டாக்கா திருப்பதிலேயே விழிப்பாயிருத்தல் வேண்டும். அதுவே அவர்க்குப் பெரும் புகழாம்' என்பதை உணர்ந்திருந் தான் திருக்கிள்ளி. அதனால் பகைவர் புறமுதுகிட்ட தும், அவன் கைவாள் உறையுள் புகுந்துகொள்ளும். அதனால், அவன் பகைவர் படையைச் சேர்ந்த எவரும் சிறு புண்ணும் பெறுவதில்லை. அவர் மேனியில் எவ்வடுவும் இடம் பெறுவதில்லை. அதனால் அவர் மேனி அழகால் மின்னிற்று. அவர் மேனி அழகு அவர்க்கு அளித்த சிறப்பின் அளவைக் காட்டிலும்,