பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டைச் சேர்ந்த எறிச்சலூர் என்ற தம் ஊரிலிருந்து புறப்பட்டுக் காடுகளும் மலேகளும் நிறைந்த காவதம பல கடந்து வெண்குடை சென்று சேர்ந்தார். வெண் குடை வங்தடைந்த புலவர், ஒருநாள் விடியற்போதில் குட்டுவன் கோமனையின் தலைவாயிலே அடைந்து தம் கிணைப்பறையைத் தட்டி ஒலி எழுப்பித் தம் வருகை யைத் தெரிவித்தார். அதுகேட்டு விழித்தெழுந்த குட்டுவன் விரைந்து வந்து அவர்முன்- கின்ருன். உடனே புலவர், அவன் தந்தையின் பேராற்றல், பெரிய தேர்ப்படை, போர்ப்பறை, அவன் இருந்து ஆண்ட வஞ்சிமாநகரின் வளம், வனப்பு ஆகியவற் றைப் பாடல் பொருளாக்கி, அழகிய பா ஒன்றைப் பாடி அவனைப்பாராட்டினர். புலவர் பாராட்டிய குடிப் புகழைக் காது குளிரக் கேட்டான் குட்டுவன். அவன் மகிழ்ச்சி அளவுகடந்து பெருகிற்று. உடனே, களம்பல கண்டு பகையரசர் பலரைக் கொன்றும் கொண்ட சினம் தணியாப் போர் வெறிமிக்கதும், பகைவரின் குருதிக் கரை படிந்து புலால் காறும் பெருமை மிக்க நெடிய பெரிய கோடு களைக் கொண்டதும், தான் பெற்ற வெற்றிக்கெல் லாம் பெரும்துணே புரிந்ததும் ஆகிய தன் பட்டத்து. யானையைக் கட்டவிழ்த்துவங்து, அவர்க்குப் பரிசிலாக அளித்து, அவர்பால் ஒட்டினன். அதன் தோற்றத். தைக் கண்டே அஞ்சியபுலவர், அது தன்னே அணுகக் கண்டதும், அவ்விடம் விட்டு அகன்று கின்ருர். தான் அளித்த யானையை அன்போடு ஏற்று, அதன்மீது அமர்ந்து செல்லக் கருதாது அகன்று நிற்கும் புலவர் செயல் திருக்குட்டுவனுக்குத் திகைப்பைத் தந்தது. புலவர் பாட்டின் பெருமைக்குத் தான் அளித்த பரிசில் சிறிது போலும் அதல்ை புல்வர் சினந்து கொண்டார் போலும் என்று எண்ணினன். உடனே, அப்பட் .டத்து யானையைக் காட்டிலும் பெரிய யானை ஒன் றையும் கொண்டுவந்து கொடுத்தான். -