பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 கல்ல யாழே உன் கையில் உளது என்ருலும், உன் இடையில் கிழிந்தகங்தல் ஆடையே காட்சி அளிக் கிறது. ஆயினும், இங்கிலையில் வேறு எவரையும் நாடிச் செல்லாமல், நாஞ்சில் வள்ளுவனேயே நாடிச் செல் கின்ருய் ஆதலின், உன் வாழ்வு வளம் பெறும். நீ விரும்பும் அனேத்தையும் அவன் வழங்குவன். அவனேக் கண்டதும் உன் வறுமை அகன்றுவிடும். அவன் தரும் வளத்தால், உன் வாழ்வில் புதுமை புகுந்துவிடும். சுருங்கச் சொன்னல், உன் தோற்றமே மாறிவிடும். இன்று இந்நிலையில் உன்னேக் காண்பவர், நீ அவன்பால் வளம் பெற்றுவரும் வளமார் நிலையைக் காண நேர்க் தால், உன்னை இன்னன் எனக் கண்டு கொள்ளார். அன்று உன்னேக் காணும் எவரும், உன்னே அடையா ளம் கண்டு கொள்வது இயலாது. அந்த அளவிற்கு உன் வாழ்வு மாறிவிடும்; மாண்புகளால் மலர்ந்து விடும்” என்று கூறி, நாஞ்சில் வள்ளுவன் கொடை வளத்தை நாவார வாழ்த்தியுள்ளார். ' ஆன்இனம் கலித்த அதர்பல கடந்து, மான் இனம் கலித்த மலையின் ஒழிய, மீன் இனம் கலித்த துறைபல நீந்தி உள்ளிவந்த, வள்உயிர்ச் சீறியாழ், சிதாஅர் உடுக்கை முதா.அரிப் பாண! நீயே பேரெண்ணலையே, கின் இறை மாறிவா என மொழியலன் மாதோ! ஒலி இரும் கதுப்பின் ஆய்இழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன் அணி பெருங்குரல் அனேயன்; ஆதலின் கின்னே வருதல் அறிந்தனர் யாரே?" - அருந்தமிழ் மூதாட்டியாம் ஒளவையார், காஞ்சில் மலே அடைந்து, காஞ்சில் வள்ளுவனேக் கண்டு வாழ்த் தினர். ஒளைவயாரின் அறிவாற்றல்களே அவன் நன்கு அறிந்திருந்தான். முடியுடை மூவேந்தரும், அவர் அடி,